கனடாவின் டொராண்டோ பகுதியில் திடீர் நிறவெறி! புள்ளி விவரங்கள் உணர்த்தும் பகீர் உண்மை!

Ontario
New COVID-19 gathering restrictions expanded to all of Ontario

உலக நாடுகள் அமைதிக்காக பேச்சுவார்த்தை ஐநா சபையில் நடத்தப்பட்டு வந்தாலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இனத்தாலும் நிறத்தாலும் அமைதியை இழக்கின்றனர்.

பிறப்பால் உயர்வு தாழ்வு கருதுவது இனவெறி என்றால் நிறத்தால் உயர்வு தாழ்வு கருதுவது நிறவெறி யாகும். அதாவது ஆங்கிலத்தில் Racism என்று கூறுவர்.

இத்தகைய நிற வெறியினால் கனடாவின் டொரன்டோ பகுதியிலுள்ள TDSB எனப்படும் டொரன்டோ மாவட்ட பாடசாலை கழகத்தில் அமைதியின்மை நிலவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் நிற வெறிக்கு எதிராக பலர் குரல் கொடுத்து வந்தாலும் தற்பொழுது TDSB இல் நடந்து கொண்டிருக்கின்ற பிரச்சனையை பார்க்கும் பொழுது நிற வெறி என்பது மனிதனின் மனதில் வேரூன்றி நிற்பதை புலப்படுத்துவதாக தெரிகிறது.

புதியதாக பதிவாகிய தகவல்களின்படி கடந்த ஆண்டுகளில் நிற வெறியின் அடிப்படையில் பல்வேறு விதமான வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது மனித உரிமை தகவலின்படி 128 பக்கத்திற்கு உருவாக்கிய அறிக்கையில் நிறவெறி குற்றங்கள் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வைரஸ் தொற்று காலங்களில் நேரடி வகுப்புகள் அல்லாமல் இணைய வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நிறவெறி தாக்குதல் விகிதம் கூடியுள்ளது மனித உரிமை ஆணையத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

2018 முதல் 2019 வரை 64 குற்றங்களும் மற்றும் ஜூன் 2019 முதல் ஆகஸ்ட் 2020 வரை சுமார் 296 குற்றங்களும் நிறவெறிக்கு சம்பந்தமான குற்றங்களாக பதிவாகியுள்ளது.

சமீபத்திய மனித உரிமை ஆணையத்தின் தகவலின்படி கூறப்படுகிறது. மேலும் TDSB மாணவர்கள் அனைவரும் 69% racism பற்றிய வெளிப்பாடுகளை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்க: கனடாவில் தமிழர்களுக்கு பெருகும் ஆதரவு! மார்க்கம் நகரில் உருபெறும் தமிழ் நினைவெழுச்சி தூபி!