விமானத்திற்குள் நுழைய மறுப்பு -தாய் தனது மகனுடன் கனடாவுக்கு பயணம் செய்ய முடியாமல் போன சோகம்

aircanada mom and son

ஒன்டாரியோ மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் அவரது மகனும் அமெரிக்காவில் ஏர் கனடா விமானத்தில் ஏற்ற மறுக்கப்பட்டதாக தெரிவித்தார். விமானத்தில் பயணம் செய்வதற்கு covid-19 கட்டுப்பாடுகளை விமானங்கள் பின்பற்றுவதால் அவர்கள் இருவரும் விமானத்தில் பயணம் செய்ய மறுக்கப்பட்டுள்ளது. விமானத்திற்குள் இருவரையும் அனுமதிக்காத காரணத்தால் வாடகைக்கு கார் ஒன்றை பதிவு செய்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டரை கடந்து வீட்டிற்குச் செல்ல வேண்டியதாயிற்று என்று அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 29ஆம் தேதி டொரன்டோவிற்கு விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று கிரிஸ்டல் பெக்கர் கூறினார். Covid-19 எதிர்மறையான பரிசோதனை முடிவுகளுக்கான ஆதாரம் அந்தப் பெண்ணிடம் இல்லாத காரணத்தால் விமானத்திற்குள் நுழைய மறுக்கப்பட்டது.

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிநாடுகளில் மருத்துவ பராமரிப்பு பெற்று கனடாவிற்கு திரும்பும் பயணிகளுக்கு covid-19 பரிசோதனைக்கான எதிர்மறையான ஆதாரங்கள் தேவையில்லை.

தனது மகன் பிறக்கும்போதே அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் பத்துமாத குழந்தையிலிருந்தே மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு அழைத்து வருவதாக கிறிஸ்டல் பெக்கர் கூறினார். 37 வயதான கிறிஸ்டல் தனது நான்கு வயது மகன் மருத்துவ சிகிச்சைக்காக கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆகஸ்ட் 29ஆம் தேதி தனது மகனின் மருத்துவ சிகிச்சைகளை முடித்தபின்பு, ஏர் கனடாவின் இணைய பக்கங்களில் கிரிஸ்டல் செக் – இன் செய்துள்ளார் .விமானத்தில் நுழையும் நேரம் வரும்வரை யாரும் ஆவணங்கள் குறித்து சோதனை செய்யவில்லை. பின்னர் ஆன்லைனில் செக் -இன் செய்த அனைவரும் கவுண்டருக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்கள். அப்போது முகவர் covid-19 எதிர்மறை சோதனை முடிவில் ஆதாரத்தை சமர்ப்பிக்கும்படி கேட்டார்.

கனடாவுக்கு திரும்பும் பயணிகளுக்கு எதிர்மறையான முடிவு ஆதாரம் தேவை என்றும் முகவர் குறிப்பிட்டார். அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக இதுபோன்ற நுழைவு சோதனைகளுக்கு விலக்குகள் உள்ளன மேலும் இந்த ஆதாரத்தை தவிர ஏனைய ஆவணங்களை கிறிஸ்டல் வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.