மறுபடியும் முதலில் இருந்தா? – கனடாவின் டொரண்டோவில் மீண்டும் பனி புயல் எச்சரிக்கை

britishcolumbia snowfall flood recovery

கனடாவின் டொரன்டோ நகர் மேலும் ஒரு பனிப் புயலால் தாக்கப்பட உள்ளது.ஏற்கனவே நகரில் ஏற்பட்ட பனிப்புயலால் சாலைகள் முழுவதும் குவிந்துள்ள பனிக் குவியல்களை அகற்றும் பணியில் நகரம் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பனிப் புயல் ஏற்படுத்திய தாக்கத்தினால் குவிந்துள்ள பனிகளை இரண்டு வாரங்களாக டொரண்டோ நகரம் இன்னும் தோண்டி கொண்டிருக்கிறது. டொரன்டோ நகரில் வியாழக்கிழமை காலை 10 முதல் 20 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் கனடா டொரண்டோவில் மக்களுக்கு குளிர்கால பயண ஆலோசனையை வழங்கியுள்ளது.

இரவு முழுவதும் நீடிக்கும் பனிப்பொழிவானது வியாழக்கிழமை காலை வரை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை பிற்பகலுக்கு பின்னர் மழையானது பனியாக மாறும் என்று வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.எனவே, டொரன்டோ நகரில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களிலும் அபாயகரமான நிலைகளை எதிர் கொள்ள வேண்டியதாக இருக்கும் என்று வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நகரம் முழுவதும் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் உள்ள பனியை அகற்றுவதற்கு நகர அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.சீரற்ற காலநிலை காரணமாக புதன்கிழமை முழுவதும் Scarborough RT-ல் போக்குவரத்து சேவை நிறுத்தப்படும்.

டொரண்டோ மேயர் ஜான் டோரி ” பனி குவியல்களை சாலைகள் மற்றும் நடை பாதைகளில் இருந்து அகற்றுவதற்கு பனி கலப்பைகள், லாரிகள் போன்றவற்றை நகரத்தைச் சுற்றி பல பகுதிகளுக்கு அனுப்பிவைத்து பின்னர் பனி பெய்தவுடன் டிரக்குகள் மற்றும் கலப்பைகள் உழவைத் தொடங்கும் ” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்