ஒன்ராறியோ மாகாணத்தில் 114 அஞ்சல் குறியீடுகள் ஹாட்-ஸ்பாட்களாக அறிவிப்பு – 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னேற்பாடு!

covid-19
Teachers Test Covid-19 Positive

ஒன்டாரியோ மாகாணம் தடுப்பூசி மருந்து செலுத்துவதற்கான முன்பதிவு செய்யும் இணைய பக்கத்தை காலநீட்டிப்பு செய்வதாக உறுதி அளித்துள்ளது.

18 வயது மற்றும் மூத்த வயதினருக்கு தடுப்பூசி மருந்து செலுத்துவதற்கான முன்பதிவு அரசாங்கம் உருவாக்கியுள்ள இணையதள அமைப்பின் பக்கத்தில் முன்பதிவு செய்ய வசதி செய்து தரப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 114 அஞ்சல் எண்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் வயதினருக்கு தடுப்பூசி மருந்து செலுத்துவதற்கான முன்பதிவு கிடைக்கப் பெறும் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் முன்பதிவு செய்வதற்கான இணையப்பக்கத்தில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டியதாகவும் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயங்காமல் இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

சில நிமிடங்கள் கழித்து முன்பதிவு செய்த பக்கத்தினை காலை எட்டு மணி அளவில் திறக்கிறது. முன்பதிவு செய்த பக்கத்திலேயே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருக்க வேண்டியுள்ளது.

பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கும் அதிகமாக நேரங்கள் கழித்து இணைய பக்கத்தை திறந்து பார்த்தால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் வரிசையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாரம் மற்றும் அடுத்த வாரம் பகுதியளவு தடுப்பூசி மருந்துகள் வைரஸ் தொற்று தீவிரமாக உள்ள இடங்களுக்கு அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர்களின் அறிவுரைப்படி விரைவாக விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள இளம் வயதினர் தடுப்பூசி மருந்து செலுத்துவதற்கான முன் பதிவினை செய்துகொண்டிருக்கின்றனர்.