கனடாவில் கோவிலுக்கு வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்!

rape

கனடாவில் கோவிலுக்கு வந்த சிறுமியை பாலியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாக்கிய சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

டொரொண்டோ மாநிலம் எடோபிகோக்கில் உள்ள ஷேவாஸ்ரம் சங்கா கனடிய கோவிலுக்கு 8 வயதுடைய சிறுமி வந்துள்ளார். அதாவது 1994 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டுவரை கோயிலுக்கு வந்த அந்த சிறுமியை கோவிலில் இருந்த சுவாமி புஷ்காரனந்தா என்ற சாமியார் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாக்கியுள்ளார்.

சிறுமி 8 முதல் 11 வயது வரை 47 வயதுடைய சாமியாரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். தற்போது அந்த சாமியாருக்கு 68 வயதாகின்றன.

Swami

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், புஷ்காரனந்தாவை குற்றவாளி என டொராண்டோ நீதிமன்றம் அறிவித்தது. இதனையடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது சிறார் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

சாமியார் புஷ்காரனந்தாவால் இளம்பெண்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.

இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளிலும் சிறுமிகள், இளம்பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டே இருக்கின்றன.

இதனை தடுக்க ஏராளமான விழிப்புணர்வுகள் மற்றும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தாலும் பெண்கள் மீதான அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளியே இல்லை. குறிப்பாக இதுபோன்ற சாமியார்களால் ஏராளமான பெண்கள் சீரழிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்க: கனடாவிற்கு சீனா விடுத்துள்ள பகிரங்க மிரட்டல்! கனேடிய மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலா?

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.