மூன்று பள்ளிகளில் covid-19 வழக்குகள் பதிவாகியுள்ளன – டொரன்டோ பொதுசுகாதாரம் அறிவிப்பு

tph covid rapid test schools
toronto public health

கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் Covid-19 தடுப்பூசி மருந்துகள் 12 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள கனடியர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகின்றன. மாகாணங்கள் அனைத்திலும் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் அனைத்து வணிகங்களும் மற்றும் பாடசாலைகளும் இயங்குகின்றன. தற்சமயம் டொரண்டோ நகரில்உள்ள மூன்று பள்ளிகளில் covid-19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக டொரன்டோ பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இம்மாகுலேட் கன்சப்ஷன் கத்தோலிக்க பள்ளி, வெஸ்ட்வே ஜூனியர் பப்ளிக் பள்ளி மற்றும் டொரண்டோவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் எலிசபெத் கத்தோலிக்க பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளிலும் covid-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது .பள்ளிகளில் covid-19 வழக்குகள் பதிவாகியது குறித்து திங்கள்கிழமை மாலை ட்விட்டரில் தொடர்ந்து தகவல்கள் வெளியிடப்பட்டன.

ஒன்டாரியோ மாகாணத்தில் Covid-19 வைரஸ் தொற்றின் நான்காவது அலையின் தாக்கத்திற்கு மத்தியில் பள்ளிகளில் பதிவாகும் covid-19 வழக்குகள் எதிர்பாராதது அல்ல என்று பொது சுகாதார அதிகாரிகள் கூறினர்.

ஒன்டாரியோ மாகாணத்தில் பதிவாகியுள்ள 816 வழக்குகளில் குறைந்தபட்சம் ஒரு covid-19 வைரஸ் தொற்று வழக்கு பள்ளிகளிலிருந்து பதிவாகிறது எனவே நகரில் 5 பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் covid-19 தொற்றை கண்டறிவதற்கு விரைவான சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் அதிகம் உள்ள பள்ளிகளில் விரைவுச் சோதனைகளை நடத்துவதற்கு ஒன்டாரியோவின் உயர்மட்ட மருத்துவர் அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குயின்ஸ் பார்க் ஊடகத்திலிருந்து தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் கீரன் அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.