கிரிப்டோ கரன்சியில் மோசடி -முதலீடு செய்தவர்களுக்கு டொரன்டோ காவல்துறை எச்சரிக்கை

toronto police

கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள் நாட்டின் பல்வேறு மக்களால் நடைபெறுகின்றன. கிரிப்டோகரன்சி தொடர்பான ஃபிஷிங் மோசடி நடைபெறுவதாக டொரன்டோ காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள் செய்யும் மக்களுக்கு டொரண்டோ காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிரிப்டோகரென்ஸி பரிமாற்றங்களுக்கு பயனர்கள் தங்கள் கணக்கு உள்நுழைவு செய்து பதிவேற்றம் செய்வார்கள். தேடுபொறிகள் மூலம் இந்த கணக்கை தேடுவதன் மூலம் பலர் மோசடியில் ஈடுபடுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோசடி குறித்து புலன் விசாரணை நடத்தப்பட்டது. இணையதளத்தில் கிரிப்டோ கரன்சி உள்ளவர்கள் சேமித்து வைக்கப்பட்ட உள்நுழைவு பக்கத்தை வலைத்தளத்தில் தேடும்பொழுது உண்மையான கிரிப்டோகரன்சி பரிமாற்ற பக்கத்தை போலவே விளம்பரப்படுத்தப்பட்ட உள்நுழைவு பக்கம் பயனர்களுக்கு தோற்றமளிக்கும்.

போலியான பக்கம் உண்மையான உள்நுழைவு பக்கத்தை போலவே இருப்பதால் பயனர்களுக்கு சந்தேகம் ஏற்படாது. பயனர்கள் கிரிப்டோகரன்சி உள்நுழைவு கணக்கு தகவலை போலியான பக்கத்தில் பதிவேற்றம் செய்வர். இவ்வாறு போலியான பக்கத்தின் மூலம் உள்நுழைவு விபரங்களை கைப்பற்றி மோசடியில் ஈடுபடுவதாக விசாரணைக்குழு காவல்துறையிடம் தெரிவித்தது.

பயனர்களின் கிரிப்டோகரன்சி கணக்கு விபரங்களை முழுவதுமாக கைப்பற்றிய பின்பு ,அந்த பக்கத்திற்கான அணுகல் பயனர்களுக்கு மறுக்கப்பட்டு விடுகிறது .கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்பவர்களின் விபரங்கள் கைப்பற்றப்பட்டு சொத்துக்களை மாற்ற வழிவகுக்கிறது

க்ரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த பொதுமக்கள் அனைவரும் அவற்றைப் பாதுகாப்பாக கையாளுவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது சிறந்தது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வகையான மோசடியில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் கனடிய மோசடி எதிர்ப்பு துறை அல்லது காவல் துறையினருக்கு உடனடியாக அழைப்பு விடுக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்