ஊரடங்கு விதிகளை பகிரங்கமாக மீறிய டெராண்டே மக்கள் – காவல் துறையின் அதிரடி நடவடிக்கை!

HEALTH-CORONAVIRUSCANADA

கனடாவில் அனைத்து மாகாணங்களிலும் தடுப்பூசி மருந்துகள் விரைவாக வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் covid-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு கனடாவின் அனைத்து மாகாண முதல்வர்களும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தொடர்ந்து அறிவித்து கொண்டு இருக்கின்றனர்.

கனடாவில் தற்போது அமலில் உள்ள வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலை கனடிய மக்களால் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலை அறிவித்த ஐந்து நாட்களிலேயே உள்ள அரங்குகள் போன்றவற்றில் மக்கள் ஒன்று கூடல்கள் போன்ற செயல்களின் மூலம் முறைகேடுகள் உருவாக்குவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Covid-19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த கனடிய அரசாங்கம் வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலை போன்ற கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து மக்கள் உள்ளக அரங்கங்கள் போன்றவற்றில் ஒன்றுகூடி சந்திப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை அறிந்த காவல்துறையினர் டொரன்டோ பகுதியில் நடைபெற இருந்த ஒன்று கூடல்களை தடுத்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில் 160 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பதனையும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பான அறிக்கையை ஒன்டாரியோ காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளையில் வாரத்தின் முடிவில் 210க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் கிடைக்கப் பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தொலைபேசி அழைப்புகள் அனைத்தும் ஒரே தொடர் கட்டிட பகுதியிலிருந்தும் உள்ளக அரங்குகளில் இருந்தும் பதிவுகளை அளிப்பதாக காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.