இரண்டு வாரங்களாவது மூட வேண்டி வரும்! மார்ச் 9 வரை கனடாவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நகரங்கள்!

Canada
Toronto, Peel Region

டொரன்டோ நகரமும் பீல் பிராந்தியமும் தற்பொழுது கூட்டு நடவடிக்கையை  குறைந்தது அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி (மார்ச் 9) வரை நீட்டிக்க பரிந்துரைக்கிறது.

இதுகுறித்த கோரிக்கையை ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. டொரன்டோ நகரினை குறைந்தது இரண்டு வாரங்கள் மூடி வைக்குமாறு டொரன்டோ நகர முதல்வர் கூறியுள்ளார்.

இதே கோரிக்கையை கீழ் பிராந்திய தலைமை சுகாதார அதிகாரியும் ஒன்டாரியோ மாகான அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளார்.

டொரன்டோ மற்றும் பீல் ஆகிய பிராந்தியங்களை மருத்துவர்களின் பரிந்துரைக்கு ஆதரவாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையை தவிர்ப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று, நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டொரன்டோ பகுதியின் மேயர் ஜோன் டோரி அவர்கள் கூறினார்.

இந்நிலையில் மீளத் திறக்கும் திட்டங்களை மெதுவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட்டு இருந்தாலும் வீட்டில் தங்கி தனிமைப்படுத்தி கொள்வதற்கான உத்தரவு டொரன்டோ பகுதியிலும் மற்றும் பீல் பகுதியிலும் தொடர்ந்து இருக்கும்.

மேலு அவசரகால நிலை ஊரடங்கு இந்த மாதம் 22ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடாவின் பல பகுதியில் உறைபனி மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணங்களினால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி நடமாடுவதை சிரமம் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்க:

இயல்பு நிலைக்கு மீண்டு வர திணறும் கனடா! உருமாறிய கொரோனா வைரஸ் திரிபுகள் குறித்த அச்சம்!