சாலை முழுவதும் பனி குவியல்கள்- டொரன்டோ நகரத்தில் பள்ளிகள் மூடப்பட்டன

snowfall
File photo. THE CANADIAN PRESS/ Tijana Martin Leave A Comment

கனடாவின் டொரன்டோ நகரத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பனி புயலினால் சாலைகள் மற்றும் நடைபாதைகள் சேதமடைந்தன. கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதன் விளைவாக சாலைகள் முழுவதும் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பாதைகள் முழுவதும் பனி குவியல்களால் மூடப்பட்டுள்ளன .

கடந்த வாரம் ஏற்பட்ட புயலின் தாக்கத்திலிருந்து நகரத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையில் திங்கட்கிழமை டொரன்டோ நகரில் மேலும் ஐந்து முதல் பத்து சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.குளிர் காலநிலை ஆலோசனையின்படி பனிப்பொழிவானது மதியம் தொடங்கி மாலை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

ஒன்டாரியோ ஏரிக்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்குமென்று சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது. ஒன்டாரியோ ஏரியின் மீது தென் மேற்கு திசையில் வீசும் காற்றானது பனிப்பொழிவு விகிதத்தை அதிகரிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

மோசமான காலநிலை போக்குவரத்து சிரமங்களை ஏற்படுத்தும் மாறிவரும் சாலைகளின் நிலைமைகளுக்கு ஏற்ப வாகன ஓட்டிகள் ஓட்டுதலை சரி செய்ய தயாராக வேண்டும். பனிப்புயல் நண்பகல் தொடங்கி நள்ளிரவு வரை தொடரும் என்று வானிலை ஏஜென்சி கூறியது.

ஜனவரி 17-ஆம் தேதியன்று 55 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்பட்டது. அதிக பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் வாகனங்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டன. மேலும் அதிக பனிப்பொழிவு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன.