தடுப்பூசி மருந்து செலுத்தி கொண்டதால் covid-19 வைரஸ் பாதிப்பு வராது என்று எண்ணுவது தவறு – டொராண்டோ மருத்துவர்களின் எச்சரிக்கை!

Toronto Doctors

டொராண்டோ சிறப்பு மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்களுக்கு ஆலோசனைகள் பலவற்றை தெரிவித்துள்ளனர்.

Covid-19 வைரஸ் தொற்று தீவிரமடைந்த பகுதியில் குடியிருப்பவர்களுக்கு முதல் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

முதல் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்ட உடனே மக்கள் எதிர்ப்பு சக்தியினை எந்த விதத்திலும் குறைய விடக்கூடாது.

முதல் கட்ட தடுப்பூசி மருந்து செலுத்தி கொண்டதால் தங்களுக்கு covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்பு வராது என்று எண்ணுவது தவறாகும்.

முதல் கட்ட தடுப்பூசி மருந்து செலுத்தி சில வாரங்களுக்குப் பின்னர் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்த வேண்டும்.

இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தினால்தான் covid-19 வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள இயலும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவ சுகாதார அதிகாரியான டாக்டரின் இல்லின் டி வில்லா திங்கட்கிழமை அன்று தடுப்பு ஊசி மருந்து செலுத்தி கொண்டவர்களின் வீதத்தை விரிவாக எடுத்துக் கூறினார்.

ஒரு மாதத்திற்கு முன்பு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின் சதவீதம் 15 ஆக இருந்தது.

தற்பொழுது தடுப்பு ஊசி மருந்து செலுத்தி கொண்டவர்களின் சதவீதம் 45 ஆக உயர்ந்துள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் கட்ட தடுப்பூசி மருந்து செலுத்தி கொள்வது முழுமையான பாதுகாப்பு கிடையாது என்று டி வில்லா எச்சரித்து உள்ளார் .

முதல் கட்ட தடுப்பூசி மருந்து உடலிலுள்ள செல்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் கிருமிகளிடமிருந்து உடலைத் தற்காத்துக் கொள்ள உதவுகிறது.

எனவே இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்து செலுத்திய பின்னர் தான் covid-19 வைரஸ் தொற்றினை தவிர்ப்பதற்கு உடலில் உள்ள செல்களை தயார் செய்கிறது.

இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்து செலுத்தி கொண்டால் மட்டுமே முழுமையான பலனை பெற முடியும்.