பள்ளி மாணவர்களுக்கு covid-19 தொற்று – பள்ளிகள் மீண்டும் மூடப்படும்

victoria
victoria dundas

கனடாவின் பெரும்பாலான மாகாணங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் covid-19 தடுப்பூசி வினியோகம் செய்தல் மற்றும் கட்டுப்பாடுகளுடன் பல்வேறு துறைகள் மீண்டும் இயங்கி வருகிறது. Covid-19 ஊரடங்கு காரணமாக மெய்நிகர் கல்வி மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டன. தற்பொழுது பெரும்பான்மையான மாகாணங்களில் covid-19 வழக்குகள் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. எனவே நேரடி வகுப்புகளுக்கு மாணவர்கள் மீண்டும் திரும்புகின்றனர்.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட 5 நாட்களில் பெரும்பான்மையான மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் சுமார் 189 covid-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. பாடசாலைகளில் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையே covid-19 வைரஸ் தொற்று தீவிரமாக பரவும் அச்சம் நிலவுவதால் பள்ளிகளின் டஜன் கணக்கான வகுப்புகள் வீட்டிலேயே சுயமாக நடத்தப்படுகின்றன. மேலும் ஒரு பள்ளி முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.

கிரேட்டர் டொரன்டோ ஹேமில்டன் பகுதியிலுள்ள பள்ளிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களின் covid-19 அறிகுறிகள் கண்டறியப்பட்டதால் சுய தனிமைப்படுத்துதலுக்கு உத்தரவிட்டனர்.ஹேமில்டன் பகுதியிலுள்ள பள்ளிகள் திங்கள் கிழமை அன்று எழுபத்தி நான்கு கோவிட் 19 வழக்குகளை புகார் அளித்துள்ளன.

டொரன்டோ மாவட்ட பள்ளி வாரியம் திங்கள் கிழமை 20 covid-19 வழக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது. Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்து சிறப்பானதாகும்.

தடுப்பு ஊசி மருந்து போட்டுக் கொள்பவர்கள் மற்றும் அவர்களை சூழ்ந்து உள்ளவர்களுக்கு பாதுகாப்பான நிலையை வழங்குகிறது என்று சுகாதார மருத்துவ அதிகாரி எளின் டி வில்லா கூறினார். எனவே covid-19 தடுப்பூசி மருந்துகளை தகுதியுள்ளவர்கள் அனைவரும் தவறாது பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்.