கொரோனா தாண்டவம்! டொராண்டோ கிறிஸ்துமஸ் சந்தை அதிகாரப்பூர்வமாக ரத்து!

toronto christmas market
Toronto Christmas Market 2020 has been cancelled due to COVID-19

கொரோனா தொற்று பரவல் காரணமாக டொராண்டோ கிறிஸ்துமஸ்  சந்தை ( toronto christmas market ) அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வருடாந்திர விடுமுறை விழா வழக்கம்போல டிஸ்டில்லரி மாவட்டத்தில் நடைபெறாது. இந்த ஆண்டு டொராண்டோ கிறிஸ்துமஸ் சந்தையின் 11 வது ஆண்டைக் குறிக்கும்.

ஒன்ராறியோவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த செய்தியை வெளியிடுவதில், எந்த ஆச்சரியமும் இல்லை.

திங்கள்கிழமை காலை மட்டும் 425 புதிய நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று கூறியுள்ளனர்.

சனிக்கிழமையன்று, ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டு மாகாண அளவிலான பொதுமக்கள் ஒன்று கூடல் வரம்புகளைத் திரும்பப் பெற்றார்.

கண்காணிக்கப்படாத தனியார் சமூகக் கூட்டங்களில் 25 பேர் வரையிலும், வெளிப்புற நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களில் 100 நபர்கள் வரையிலும் பங்கேற்க முடியும்.

இந்த நிலையில் தான் கொரோனா தொற்றுநோயின் விளைவாக இந்த கிறிஸ்மஸ் சந்தை ரத்து செய்யப்படுவதாக டொராண்டோ மேயர் ஜோன் ரொறி நேற்று பிற்பகல் உறுதிப்படுத்தினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகரித்து வரும் தொற்றுநோய்களின் மத்தியில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய அமைப்பாளர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த சந்தை நடத்தப்படாதது துரதிர்ஷ்டவசமானது, இது வருந்தத்தக்கது, மிகவும் வருந்தத்தக்கது, ஏனென்றால் இவை மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன, என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாக, ரொறன்ரோ கிறிஸ்துமஸ் சந்தை ரத்து செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆறு வார கால நிகழ்ச்சியில் சுமார் 700,000 பேர் கலந்து கொள்கிறார்கள் என்று சந்தை அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்க: கனடாவின் முக்கிய நகரங்களை தாக்கும் கொரோனா 2ஆவது அலை!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.