toronto : கனடாவில் காணாமல் போன 28 வயது தமிழ் இளைஞன்! காவல் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

toronto
toronto Men missing

கனடாவில் டொராண்டோ ( toronto) தமிழர் வாலிபர் ஒருவர் காணாமல் போனதாக காவல் துறையினர்  தகவல் தெரிவித்துள்ளனர்.

டொராண்டோ  காவல் துறையினர் இது தொடர்பிலான தகவலை புகைப்படத்துடன் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

அதில், arooran Sritharan என்ற 28 வயது இளைஞன் கடந்த 23 ஆம் தேதி அன்று பகலில் கடைசியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் Port Union Rd மற்றும் Lawrence Av பகுதியில் தான் கடைசியாக பார்க்கப் பட்டுள்ளார்.

சாதாரண உடல் வாகு கொண்ட Arooran Sritharan, பழுப்பு நிற கண்கள் கொண்டவர் எனவும், ஷேவ் செய்யாமல் இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் அணிந்திருந்த ஆடைகள் தொடர்பான விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Arooran Sritharan குறித்து தகவல் தெரிந்தால் காவல்துறையினரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms