திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும்;டொர்னடோ பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணி

Christmas
What's open and closed around the GTA this Christmas 2020

பலத்த புயலினால் ஏற்பட்ட சேதங்கள் :

ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள டொர்னடோ பகுதியில் சூறாவளி தாக்கியதால் பெரும் சேதம் அடைந்தது. சென்ற வாரம் புயலால் தாக்கப்பட்ட டொர்னடோ பகுதியை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களால் உபயோகிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது.சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஒரு பகுதியை மட்டும் உபயோகிப்பதற்கு காவல்துறையினர் திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாதிப்படைந்த பகுதிகளில் தூய்மைப்படுத்தி சீரமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் பொது இடங்கள் முழுமையாக தூய்மைப்படுத்தி சீரமைக்கப்படும் என்று பாரி தெரிவித்துள்ளார்.

பாதிப்படைந்து மீட்கப்பட்ட பகுதியை இன்று நண்பகல் காவல்துறையினர் திறப்பதாக கூறியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை தாக்கிய புயல் வீடுகளின் உட்புற கட்டமைப்புகளை கடுமையாக சேதம் ஆக்கியுள்ளது. புயலின்போது பல்வேறு மரங்கள் மற்றும் கட்டிடங்கள் போன்றவை மோசமாக பாதிப்படைந்துள்ளது. சேதமடைந்த பகுதியிலிருந்து மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீட்பு பணியின் போது அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடரும் மீட்பு பணி :

புயலின் தாக்கத்தினால் உடைமைகளை இழந்து தவிக்கும் மக்கள் அங்குள்ள தகவல் மையத்தில் தேவையான உதவிகளைப் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு தகவல் மையம் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புயலினால் பாதிப்படைந்த குடியிருப்பாளர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சால்வேஷன் ஆர்மி இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பிடம் மற்றும் உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவுவதற்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் தானங்கள் அளிக்கப்பட்டு வருகின்றது.