ஒன்ராறியோவில் வைரஸ் தொற்று பரவல் மிக தீவிரம் அடைவதற்கான சாத்திய கூறுகள்? அறிவியல் ஆலோசனை குழு அதிர்ச்சி தகவல்!

Doug Ford
Ontario Premier Doug Ford says according to health officials the province is now officially in the second wave of the coronavirus pandemic.

ஒன்ராரியர்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு மாகாண முதல்வர் டக்போர்ட் கோரியுள்ளார்.

விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் மூன்றாவது கொரோனா வைரஸ் அலை ஒன்ராரியோவில் பரவலடைய ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து ஒன்ராறியோ மாகாண முதல்வர் டாக் போடு அவர்கள் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஒன்டாரியோ மக்கள் அனைவரும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக மீண்டு வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையாக பரவி வருகிறது. ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள மருத்துவ குழுக்களும் மருத்துவ நிபுணர்களும் இதனை உறுதிபடுத்தியுள்ளனர்.

ஒன்டாரியோ மாகாணத்தில் வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால், ஒன்டாரியோ மக்கள் அரசாங்கம் அறிவித்துள்ள விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் முறையே பின்பற்ற வேண்டும்.

ஒன்ராறியோவின் அறிவியல் ஆலோசனை குழு ஒன்ராறியோவில் வைரஸ் தொற்று பரவல் மிக தீவிரம் அடைவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதனால் முதல்வர் டாக் போர்டு அவர்கள் மக்கள் தனது பாதுகாப்பு நிலையை அடிக்கடி உறுதி செய்து கொள்வது அவசியமானது என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்றாவது அலை தொற்று பரவல் ஏற்படுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

09 இலட்சத்து 15 ஆயிரத்து 868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில்  மாத்திரம் 02 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.