மாகாணங்கள் அறிவிக்கும் ஊரடங்கு தளர்வுகள் ஒருபோதும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க போவது கிடையாது – கனடா சுகாதார அதிகாரி அதிர்ச்சி தகவல்!

Canada-Coronavirus-Update

கனடா முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பொது மக்களின் அடிப்படைத் தேவை, மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு முக்கிய துறைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

பல துறைகள் பிராந்தியத்தின் அடிப்படையில் மீளத் திறப்பதற்கு அனுமதி கனடா அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

இதையடுத்து கனடாவில் அமலில் உள்ள covid-19 கட்டுப்பாட்டு விதிமுறைகள் போதுமானதாக அமையவில்லை என்று பொது சுகாதாரத் துறையின் தலைமை வைத்திய சுகாதார அதிகாரி தெரசா டாம் அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு மாகாணங்களும் அதன் பொருளாதார எழுச்சியை எதிர்நோக்கியே இவ்வாறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துக் கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணங்கள் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பெரும்பான்மையான மக்கள் வெளியே சாலை மற்றும் வீதிகளில் நடமாடுவதை காணமுடிகிறது.

இதனால் கொரானா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும் ஆனால் குறையப் போவது கிடையாது என்பதனையும் அறிவித்துள்ளார்.

மேலும் மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையே கடைப்பிடித்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மாகாணங்கள் அறிவிக்கும் ஊரடங்கு தளர்வுகள் ஒருபோதும் வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க போவது கிடையாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தலைமை வைத்திய சுகாதார அதிகாரி பொறுப்பில் இருந்து இதனை அறிவுறுத்துவது எனது முக்கிய பணி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.