கனடாவில் மீண்டும் தேசிய அளவில் லாக்டவுன் அறிவிக்கப்படலாம்! ஆட்டிப்படைக்கும் கொரோனா!

Justin Trudeau
canada says PM Justin Trudeau

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கியுள்ளதாகவும், மீண்டும் தேசிய அளவில் லாக்டவுன் அறிவிக்கப்படலாம் எனவும் அறிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் ஆகிய நான்கு பெரிய மாகாணங்களில் பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது.

அங்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தொடங்கி விட்டதாகவும், இனி வரும் காலங்களில் நிலைமை மிகவும் மோசமடையலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தேசிய தொலைக்காட்சி ஒன்றில் உரை நிகழ்த்திய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இவ்வாறு கூறினார். மீண்டும் தேசிய அளவில் லாக்டவுன் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது எனவும் அவர் அறிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு சுமார் 300 என்ற அளவில் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் பரவல், இப்போது நாள் ஒன்றுக்கு 1,248 என்ற அளவில் திடீரென திடீரென அதிகரித்துள்ளது.

கனடாவில் ஒரு தொற்றுநோயின் தாக்கத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே 145,000 க்கும் அதிகமான மக்களைப் பாதிக்கப்பட்டனர். இதுவரையில் கொரோனாவினால் 9,242 பேரின் உயிர் பறிபோனது.

இந்த இரண்டாவது அலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஆற்றல் நமக்கு உள்ளது.

ஏனென்றால் முன்பே நாம் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளோம் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

கனடா மக்கள் மீண்டும் பொது இடத்திற்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடவெளியை கடைபிடித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பிரமதமர் கூறினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தால், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு ஏற்கனவே அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்க: கனடாவின் முக்கிய நகரங்களை தாக்கும் கொரோனா 2ஆவது அலை!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.