The Brass Rail: கனடாவில் இரவு விடுதிக்கு நடனம் பார்க்கச் சென்ற 500 ஆண்கள்! சமீபத்தில் வெளியான தகவலால் காத்திருக்கும் அதிர்ச்சி!

The Brass Rail
The Brass Rail Lodge Corona Case

The Brass Rail : கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோ நகரில் இரவு விடுதிக்கு நடனம் பார்க்கச் சென்ற 500 ஆண்களுக்கு, வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்த இரவு விடுதியில் பணி செய்து வந்த, பணியாளர் ஒருவருக்கு, கொரோனா இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளதை  தொடர்ந்து,

நடனம் பார்க்கச் சென்ற 500க்கும் மேற்பட்ட ஆண்கள், தங்களை சுய தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டிம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பலர் குடும்பத்திற்கு தெரியாமல் இரவு விடுதிக்கு சென்றுள்ளதால், என்ன காரணத்திற்காக  தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை குடும்பத்தினரிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

CRA: கனடாவின் அரசு கணக்கில் மாபெரும் தகவல் திருட்டு! 9,000 பயனர் கணக்கு விவரங்கள் பறிபோன சோகம்!

டொராண்டோவிலுள்ள இரவு விடுதிக்கு சென்ற அந்த 550 பேருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது என்றும்,

அவர்கள் அனைவரும் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

ஒன்ராரியோ முதல்வர் டக் போர்டு இது குறித்து பேசுகையில்,”இந்த ஆண்கள் தங்கள் தங்கள் குடும்பத்தினரிடம், இது தொடர்பாக என்ன சொல்லப்போகிறார்களோ தெரியவில்லை” என்றார்.

மேலும், குடும்பத்தினரிடம் நான் நடனம் பார்க்கத்தான் சென்றேன்  என்று கூறிய பின் அவர்களின் நிலை என்ன ஆகும் என்பது குறித்து கவலையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், The Brass Rail என்று அழைக்கப் படும், அந்த இரவு விடுதி, தங்கள் பணியாளர் ஒருவருக்கு கொரோனா என்று அரசு தரப்பில் இருந்து உறுதி செய்தவுடன், விடுதியை மூடி விட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms