பள்ளி அறங்காவலர்கள் மருத்துவர்கள் அல்ல என்று செய்தியாளர்களிடம் கூறிய Doug Ford-Toronto District School Board மற்றும் Catholic District School Board

Doug Ford
Ontario Premier Doug Ford says according to health officials the province is now officially in the second wave of the coronavirus pandemic.

கனடாவின் ஒன்டாரியோவில் Covid-19 வழக்குகளின் எண்ணிக்கை படிப்படியாக வீழ்ச்சியை சந்திப்பதால் மாகாண அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொது சுகாதார கட்டுப்பாடுகள் பெரும்பான்மையாக நீக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக Covid-19 வைரஸ் தொற்று அச்சுறுத்தலின் காரணமாக முகக்கவசம் அணிவது அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டது.

மாகாணத்தின் பெரும்பாலான இடங்களில் பொது சுகாதார கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளில் முகக்கவச கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான காலநீட்டிப்பினை நாடுவதிலிருந்து பள்ளி வாரியங்களை ஊக்க படுத்துகிறார்.பள்ளி அறங்காவலர்கள் மருத்துவர்கள் அல்ல என்று செய்தியாளர்களிடம் கூறிய Doug Ford ,ஒன்ராறியோவின் உயர்மட்ட சுகாதார அதிகாரியின் ஆலோசனையை பின்பற்ற வேண்டுமென்று வலியுறுத்தினார்.

Toronto District School Board மற்றும் Catholic District School Board ஆகிய இரண்டு வாரியங்களை கொண்ட அறங்காவலர்கள் ,Covid-19 வைரஸ் தொற்று பரவக்கூடிய அபாயங்களுக்கு மத்தியில் ,எதிர்வரும் மார்ச் 21ஆம் தேதி பள்ளிகளில் கட்டுப்பாடுகளை உயர்த்துவதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்தி வைக்குமாறு அரசாங்கத்திடம் முறையாக கேட்டுக்கொண்டுள்ளனர்.

அனைத்து பள்ளி வாரியங்களும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு முகக்கவச கட்டுப்பாடுகளை உயர்த்துவதற்கான மாகாண அரசாங்கத்தின் திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று Barrie -யில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.பொது சுகாதார நிபுணர்களின் ஆலோசனை படி பள்ளிகளில் முக கவசம் அணிய வேண்டும் என்று Ford அறிவுறுத்தியுள்ளார்.