உலக அரங்கில் உரைக்க வேண்டும்! கனடாவில் தமிழர்களின் எழுச்சி மிகு போராட்டம்!

canada economy
canada economy

கனடாவில் டொரன்டோ ஒட்டாவா அல்பேட்டா மற்றும் மொன்றியல் பகுதிகளில் மக்கள் எழுச்சி போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது முழுவதும் தமிழர்களுக்காக நடைபெற்றது.

போராட்டத்தினை கனடிய தமிழர் சங்கம் மற்றும் கனடிய தமிழர் மாணவர் சங்கம் ஒன்றிணைந்து போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகிறது.

இந்த போராட்டத்தில் ஐக்கிய நாடுகளின் நீதி கட்டுப்பாட்டிற்குள் இலங்கையையும் கொண்டு வரவேண்டும் என்றும், இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு நடந்தது இனவெறி தாக்குதல் மற்றும் இன அழிப்பு என்பதனையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் ஈழ தமிழர்களுக்கான நிலையான அரசியல் தீர்வு வேண்டும் என்று மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று எதிர்பார்த்த அளவிற்கு கட்டுக்குள் வரவில்லை!

ஈழத் தமிழர்களின் உரிமைக்காக கனடாவில் ஏற்கனவே ஊர்திப் பவனி மூலம் போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.

இந்நிலையில் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டமானது வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டு, வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டொரண்டோவில் US கன்ஸேலெட் முன்பும் , ஒன்டாரியோ சட்டசபையின் முன்பும், தண்டாஸ் சதுக்கத்திலும் தொடர்ந்து நடைபெற்றது.