கடுமையான துப்பாக்கிச் சூடு சட்டம் | கனேடிய நாடாளுமன்றம் நோக்கிய தமிழர்களின் வாகனப் பேரணி – இன்றைய பரபரப்பு!

test negative
Canada will require incoming international air passengers to test negative before boarding, and other news from around the world.

கனடாவில் கடுமையான துப்பாக்கிச் சூடு சட்டம் ஒன்றினைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படுவது புதிய துப்பாக்கிகளை தடை செய்வதற்கான அதிகாரத்தினை உள்ளூராட்சிகளுக்கு வழங்கும் நடவடிக்கை என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

கைத்துப்பாக்கிகளை வைத்திருத்தல் மற்றும் வெளியே எடுத்துச் செல்லுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு கடுமையான விதிமுறைகளை கொண்டு வரும் அதிகாரம் உள்ளூராட்சிகளுக்கு வழங்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

மேலும் இதன் மூலம் கடுமையான துப்பாக்கி சட்டங்களை குறித்த தேர்தல் வாக்குறுதியை பிரதமர் ஜஸ்டின் அரசு நிறைவேற்றி உள்ளது.

அதேவேளை எதிர்வரும் மாதங்களில் தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளை மீண்டும் கொள்வனவு செய்யும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் அறிவித்துள்ளார்.

தமிழர்களுக்கான அறிவிப்பு:

பரபரப்பான சூழலில் கனேடிய நாடாளுமன்றம் நோக்கிய தமிழர்களின் வாகனப் பேரணி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

டொரண்டோவில் இருந்து தொடங்கும் வாகன பேரணி மாலை ஒன்டாரியோ சென்றடைய ஏற்பாடு நடைபெற்று வருகின்றது.

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நிறுத்த கனடிய அரசிடம் கூறும் வகையில் இந்த வாகன பேரணி அமைகின்றது.

காலை 8 மணி அளவில் டொரண்டோவில் இருந்தும் பத்து முப்பது மணிக்கு மாண்டோனில் இருந்தும் புறப்படும் இந்த வாகன பேரணியானது ஒன்று முப்பது மணி அளவில் சென்றடையும்.

பேரணியின் இறுதியில் கனடா அரசாங்கத்திடம் வழங்கப்பட உள்ள நீதிகோரும் மனவுக்கு நாடாளுமன்ற உறுப்பினரான கரி ஆனந்தசங்கரி அங்கீகாரம் பெற்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இணைத் தலைமை நாடுகளில் கனடாவும் இருப்பதால் தமிழ் மக்களை சார்ந்த முடிவுகளை எடுக்க தார்மீக கடமை உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: கனடாவில் தமிழர்களுக்கு பெருகும் ஆதரவு! மார்க்கம் நகரில் உருபெறும் தமிழ் நினைவெழுச்சி தூபி!