அமெரிக்காவின் போர் முடிவு -ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படும் கனடிய சிறப்பு படைகள்

air canada
The Boeing 787-9 has the range and capacity to make the long-haul flight. Photo: Air Canada

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஊடுருவி அங்குள்ள மக்கள் மீது தாக்குதலை ஏற்படுத்துகின்றனர். ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபன்கள் கட்டுக்குள் வரும் வரை தீவிரவாத தாக்குதல் மோசமாகிக் கொண்டே இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் வாழும் ஆப்கானியர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தாலிபன்கள் உடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன
கனடாவின் சிறப்பு ராணுவப்படை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட உள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள கனடிய தூதரகர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை வெளியிட்ட பெயர் தெரியாத நபர் எத்தனை சிறப்புப் படைகள் அனுப்பப்படும் என்பதை குறிப்பிடவில்லை

.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகங்களை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கு சில வாரங்களுக்கு முன்பு பைடன் அரசாங்கம் தூதரக ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை எடுத்தது.

ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹாரில் தாலிபன் இயக்கத்தின் பிறப்பிடமாகும். இந்த நகரத்தை வியாழக்கிழமை அன்று தாலிபான் இயக்கம் கைப்பற்றியது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் தாலிபான் இயக்கம் அமைப்பு வேகமாக கைப்பற்றி வருவதாக கூறப்படுகின்றன.

ஆப்கானிஸ்தானில் வாழும் பிற நாட்டை சேர்ந்தவர்களை விரைவாக வெளியேற்றுவதற்கு பல்வேறு நாடுகள் படைகளை அனுப்பி தனது நாட்டினரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றன.

கனடா உடன் காபூல் நகரில் பணிபுரிந்த ஆப்கானியர்கள் தாலிபான்கள் இடமிருந்து தப்பித்து செல்ல விரும்புவதாக உதவி கோரி விண்ணப்பித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இருக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் சமையல்காரர்கள் மற்றும் காவலர்கள் விரைவாக மீள்குடியேற்றம் செய்யப்படுகின்றனர். தாலிபான்களின் கொடூர தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமானது என்று பல்வேறு நாடுகளும் தெரிவிக்கின்றன