ஒரே குடும்பத்தில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்! ஒன்ராறியோவில் சோகம்!

Mitchell Lapa
Suspect in Ottawa shooting was reportedly shut out of father’s will

ஒன்ராறியோ மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக் கொ ல்லப்பட்ட வழக்கில், கொ லையாளி சு ட்டுக் கொ ல்லப்பட்டவரின் உறவினர் Mitchell Lapa என்பது தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, ஒன்ராறியோவைச் சேர்ந்த 50 வயதான Chris Traynor என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த ஒருவர், அவரையும் அவரது மூன்று குழந்தைகளையும் சு ட்டுக்கொன்றார்.

இந்த சம்பவத்தில் Chris அவர்களின் மனைவியான Loretta Traynor என்பவருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்ட நபர், தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.’

இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், இச்சம்பவத்தை அரங்கேற்றியது 48 வயதான Mitchell Lapa என்ற நபர் என்பதும், அவர் Chris அவர்களின் மனைவியின் சகோதரர் தான் என்பதும் தெரியவந்துள்ளது.

Chris அவர்களின் மனைவியின் தந்தை எழுதி வைத்துள்ள உயில் ஒன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் தனது சொத்து முழுவதையுமே மகளுக்கே  எழுதி வைத்துள்ளார். அவரது சகோதரர் Mitchell Lapa-வுக்கு வெறும் 30,000 டாலர்கள் மட்டுமே எழுதிவைத்துள்ளார்.

தற்போது நடந்துள்ள கொலைகளுக்கும் இந்த உயிலுக்கும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இப்போதைக்கு அது குறித்து எதுவும் கூறமுடியாது என காவல் துறையினர் கூறிவிட்டார்கள்.

பழிவாங்கும் நோக்கில் குடும்பத்தில் நான்கு பேரைக் கொன்ற Lapa, தன் சகோதரியை கொல்லாமல் விட்டதும் வேண்டுமென்றே செய்த செயல்தான் என ஒரு கருத்து நிலவுகிறது.

இதையும் படியுங்க: கனடாவில் குழந்தைகளிடம் இலேசான கொரோனா அறிகுறி! வெளியான ஆய்வின் முடிவுகள்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.