கனடாவில் ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில், இன்னும் எதிர்கொள்ளப்படும் சிக்கல்!

bc
bc ( Evan Mitsui/CBC News)

கனடா முழுவதும் அவசரநிலை ஊரடங்கு இந்த மாத இறுதிக்குள் நிறைவடைந்து விடும்.

இந்த அவசர கால ஊரடங்கு நிலை நிறைவடையும் நிலையில் கனடாவின் இன்னும் சில பகுதிகளில் புதிய தொற்றுகளும், தொற்றுகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் பதிவாகிக் கொண்டு தான் இருக்கின்றன.

கனடாவில் இதுவரை 8 லட்சத்து 8 ஆயிரத்து 129  நோய்த்தொற்றுகள் எண்ணிக்கையை கடந்த நிலையில் கனடாவின் பல்வேறு மாகாணங்களில் சில பகுதிகளில் இறப்புகளின் எண்ணிக்கையும் நோய்த்தொற்று களின் எண்ணிக்கையும் குறைந்து இருப்பினும் பதிவாகி கொண்டுதானிருக்கின்றன.

இந்நிலையில் அல்பேட்டா, கியூபெக் போன்ற பகுதிகளில் சில கோவிட்  கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்று களின் எண்ணிக்கை இந்த வார விடுமுறையில் தான் எட்டு லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் 2968 புதிய பதிவுகள் இன்று பதிவாகியுள்ளன.

ஒன்டாரியோவில் 1265 தொற்றுகளும் ,கியூபெக்கில் 853 தொற்றுகளும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 113 தொற்றுகளும், அல்பேட்டா பகுதியில் 269 தொற்றுகளும், சச்சுகெச்சுவானில் 171தொற்றுகளும்,மணி டோ பாவில் 51 தொற்றுகளும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் ஒன்டாரியோவில் 33 உயிரிழப்புகளும், கியூபெக்கில் 17 உயிரிழப்புகளும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 13 உயிரிழப்புகளும், அல் பட்டாவில் ஒரு உயிர் இழப்பும் லெபடோவில் பதினோரு உயிரிழப்புகளும் புதிதாக பதிவாகியுள்ளன.

இவ்வாறு கனடாவில் நோய்தொற்று களும் உயிரிழப்புகளும் புதிதாக பதிவாகி கொண்டிருக்கின்றது.

மேலும் கனடாவில் குளிர்காலம் என்பதால் வெப்பநிலை -10 டிகிரிக்கும் மேலிருக்கும் சூழ்நிலைகளை கருதியே ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க: பிப்ரவரி 22 ஆம் தேதி வரை டொராண்டோ மக்கள் பின்பற்றியே ஆக வேண்டிய உத்தரவு – அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர்!