#StandwithUkraine – கனடாவில் ரஷியாவின் போர் அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

ukraine russia war

உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை நிறுத்தி வைத்துள்ளதால் பதட்டங்கள் அதிகரித்து வருகிறது. உக்ரைனில் வசிக்கும் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களின் பாதுகாப்பிற்காக பலரும் பயப்படுகிறார்கள்.

கனடாவில் வசிக்கும் உக்ரேனிய சமூகத்தினர் ரஷ்யாவின் படையெடுப்பு அச்சுறுத்தலுக்கு எதிராக மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கனடிய அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறார்கள்.

கனடாவிலுள்ள உக்ரேனியர்கள் தங்கள் சொந்த நாட்டில் இருக்கும் அங்கு வசிக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் நெருக்கடி நிலைமை என்ன என்பதை குறித்து கவலைப்படுகிறார்கள். சுமார் ஒரு லட்சம் துருப்புகளை ரஷ்யா உக்ரேன் உடனான எல்லைகளில் குவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் எங்கள் வீட்டின் வாசலில் முரட்டுத்தனமான போக்கை மேற்கொள்வதாக ரஷ்யாவின் ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும் ரஷ்யா துருப்புகளை குவித்துள்ளதாக கூறப்படும் செய்திகளை ஜனாதிபதி Vladimir putin மறுத்துள்ளார்

உக்ரைன் ஒரு போதும் நேட்டோவில் சேர அனுமதிக்கக் கூடாது என்றும் முன்னாள் சோவியத் நாடுகளில் படைகளை நிறுத்துவது மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ரஷ்யா கோரிக்கை வைத்துள்ளது. நேட்டோ அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டன.

2016 கணக்கெடுப்பு தரவுகளின்படி, கனடாவில் வசிக்கும் சுமார் 1.3 மில்லியனுக்கும் அதிகமான உக்ரேனிய வம்சாவளியைச் சேர்ந்த மக்களிடையே சாத்தியமான போரின் அச்சுறுத்தல் உணரப்படுகிறது. போர் அச்சுறுத்தலுக்கு நடுவில் கனடிய அரசாங்கம் மற்றும் கனடியர்கள் ஆதரவை கோரி உக்ரேனிய இயக்கம் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.