இலங்கையில் பொருளாதாரச் சிக்கல் – உணவு பொருட்கள் பற்றாக்குறை ஏற்படலாம் என்று இலங்கையில் வசிக்கும் கனடிய மக்களுக்கு எச்சரிக்கை

srilanka affecting by inflation canada alert to canadian

Covid-19 வைரஸ் தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரம் சரிவினை நோக்கி செல்கின்றன. பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இலங்கையில் தற்போது பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Covid-19 காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் நிலையில்லா தன்மை ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை, மருத்துவ சேவைகள் பாதிப்பு போன்ற பல்வேறு சிக்கல்கள் இலங்கையில் ஏற்படலாம் என்று கனடிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கையில் வாழும் அல்லது இலங்கைக்கு செல்லும் கனடியர்களுக்கு ட்விட்டரில் கனடிய அரசாங்கம் எச்சரிக்கை செய்தியை தெரிவித்துள்ளது .கனடிய அரசு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள பயண ஆலோசனையில் மருத்துவம் முதலான சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்தது.

இலங்கையில் கடந்த 6 மாதங்களில் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்ததால், பணவீக்கம் அதிகரித்தது. நிலையில்லா பொருளாதாரத்தின் விளைவாக அத்தியாவசிய பொருள்களின் விலை அதிரடியாக உயர்ந்தது.

பொருள்களின் கடுமையான விலையேற்றத்தை சமாளிக்க உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்றவற்றை போதுமான அளவு இருப்பில் வைத்துக் கொள்ளுமாறு இலங்கையில் இருக்கும் கனடிய மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது .

இலங்கையின் பொருளாதார சிக்கல் மற்றும் பயணிகள் மீதான அதன் தாக்கம் போன்றவற்றிற்கு இலங்கையில் வசிக்கும் மற்றும் இலங்கைக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு முன்னெச்சரிக்கையாக ஆலோசனைகளை வழங்கியுள்ள முதல் நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.