தெற்கு ஒன்டாரியோவில் பலத்த காற்றின் காரணமாக பெரும் சேதம் – மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்

rainfall toronto environment canada
crerdit- cp24 rain

கனடாவின் தெற்கு ஒண்டாரியோ மற்றும் டொரன்டோ மாகாணத்தில் அதி வேகத்தில் பலத்த காற்று வீசியது. வேகத்துடன் வீசிய பலத்த காற்றினால் பெரும்பான்மையான பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின் இணைப்பு கம்பிகள் பாதிக்கப்பட்டதில் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சனிக்கிழமை அன்று நகர்ந்த குளிர்ந்த காற்று மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதாக சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.
பலத்த காற்றானது மாலை வரை வீசியதால் அவசரகால மீட்புக் குழுக்கள் மற்றும் ஹைட்ரோ குழுக்கள் வானிலை தொடர்பான அழைப்புகளுக்கு பதில் அளிப்பதில் தீவிரம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.

டொரன்டோ ஹைட்ரோ அமைப்பு நகரத்தில் மின்வெட்டு எதுவும் இல்லை என்று அறிவித்திருந்தது. ஆனால் ஆங்காங்கே பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

முறிந்து விழும் மரங்கள் மற்றும் அறுந்து விழும் மின் இணைப்பு கம்பிகள் போன்ற அபாயகரமான சேதங்களை மீட்புக்குழுவினர் கையாளுகின்றனர். அனைத்து சூழலும் சாதாரண நிலைக்கு மீட்டெடுக்கப்படும்வரை பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் எனவே, மக்கள் உதவியாக இருக்கவேண்டும் என்று அமைப்பு தெரிவித்துள்ளது.

மின்சாரம் இல்லாமல் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியது. கீழே முறிந்து விழுந்த மரங்கள், மின் இணைப்பு கம்பிகள் மற்றும் சேதமடைந்த போக்குவரத்து விளக்குகள் தொடர்பான அழைப்புகள் அதிக அளவில் வந்ததாக டொரன்டோ காவல்துறையினர் தெரிவித்தனர்.