பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்ற பாதுகாப்பு துறை அமைச்சர் அனிதா ஆனந்த் – இளம் வயது நினைவுகளை புகைப்படத்தோடு ட்விட்டரில் பதிவிட்டார்

anita anand

இந்தியாவிலுள்ள தமிழகத்தை பூர்விகமாக கொண்ட அனிதா ஆனந்த் லிபரல் அரசாங்கத்தின் அமைச்சரவையில் கனடிய தேசிய பாதுகாப்பு துறையின் அமைச்சராக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் நியமிக்கப்பட்டார்.நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கும் முதல் பெண்மணி என்ற புகழுக்கு உரியவரானார். அமைச்சர் அனிதா ஆனந்தின் வெற்றியை தமிழர்கள் அனைவரும் பாராட்டினர்.

தமிழரான அமைச்சர் அனிதா ஆனந்தின் தந்தை புலம் பெயர்ந்தவர் ஆவார். தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் தனது பெற்றோருடன் செலவழித்த பழைய நாட்களின் மகிழ்ச்சியான தருணங்கள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் அனிதாவின் தந்தை கனடாவில் குடியேறியவர் ஆவார். கனடாவில் சமீபத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் அனிதா ஆனந்த் ஈடுபட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். புகைப்படத்தோடு அனுபவித்த மகிழ்ச்சியான தருணங்கள் குறித்தும் ட்விட்டரில் விவரித்திருந்தார் .

“கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் இளம் வயதில் எங்களது வார இறுதி நாட்களை பனிச்சறுக்கு விளையாட்டில் செலவழித்த நாட்கள் எனக்கு நினைவுக்கு வருகிறது. பொதுவாக எங்களின் வார இறுதி நாட்கள் வெளியிடங்களில் தான் செலவிடப்படும். எனது தாய் மற்றும் தந்தை அனைத்து விளையாட்டு மற்றும் எங்களால் செய்யக்கூடிய செயல்பாடுகளிலும் எங்களைச் சேர்த்து விட்டனர் ” என்று இடுகையில் தெரிவித்திருந்தார்.

” எனது குடும்பம் கனடாவிற்கு குடியேறியவர்கள் என்பதாலோ என்னவோ கனடிய அரசாங்கம் வழங்கும் அனைத்து வசதிகளையும் பாராட்ட வேண்டும் என்று பெற்றோர் விரும்பினர் .தற்பொழுது என் பெற்றோர்களை பற்றியும் என் குழந்தை பருவத்தை பற்றியும் நினைத்துப்பார்க்கிறேன் ” என்று அமைச்சர் அனிதா ஆனந்த் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.