கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 60 ஆயிரத்தில் ஒரு நபருக்கு பக்கவிளைவு! அஸ்ட்ரா ஜனகா இடைநிறுத்ததின் பின்னணி!

AstraZeneca vaccine
Ontario premier says new age recommendations for AstraZeneca vaccine

ஒன்டாரியோ மாகாணத்தின் முதல்வர் மற்றும் ஜெனரல் வழக்குறைஞர்  மாகாணத்தின் தடுப்பூசி மருந்து குறித்த திட்டத்தின் தகவல்களை வெளியிடுவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் ஏற்கனவே அஸ்ட்ரா ஜனகா முதல் கட்ட தடுப்பூசி மருந்து மாகாணம் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருவதை இடை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

தடுப்பூசி மருந்து செலுத்தி கொண்டவர்களில் அரியதாக ஒருவர் அல்லது இவருக்கு தீவிரமாக ரத்தம் உறைதல் ஏற்படுவதால் இவ்வாறு இடைநிறுத்தம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஒன்டாரியோ மாகாணத்தின் முதன்மை மருத்துவ சுகாதார அதிகாரி மருத்துவர் டேவிட் வில்லியம்ஸ் அவர்களின் அறிவிப்பின்படி தடுப்பூசி மருந்து ஆனது செலுத்திக் கொள்பவர்களில் 60 ஆயிரத்தில் ஒரு நபருக்கும் அல்லது ஒரு லட்சத்து 25 ஆயிரத்தில் ஒருவருக்கும் ரத்தம் உறைதல் நிகழ்வு ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்ராரியோ மாகாணத்தில் அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி மருந்து செலுத்தி கொண்டவர்களில் ஆறு பேருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அரியதாக ஏற்பட்டிருப்பினும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பைசர் தடுப்பூசி மருந்துகளை அதிகமான அளவில் வினியோகம் செய்ய வேண்டுமெனவும், அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி மருந்துகளை இடை நிறுத்தம் செய்தது தற்காலிகமாக தொடர வேண்டும் எனவும் மருத்துவர் டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் 50,000 அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி மருந்துகள் இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்து செலுத்துவதற்கு எஞ்சி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.