ஒன்ராரியோ மாகாணத்தில் shoppers drug mart மருந்தகம் அமைந்துள்ள இடங்களிலெல்லாம் உடனடி covid-19 பரிசோதனை!

shoppers drug mart
shoppers drug mart

ஒன்ராரியோ மாகாணத்தில் உடனடியாக covid-19 பரிசோதனை செய்வதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்ராரியோ மாகாணத்தில் shoppers drug mart மருந்தகம் அமைந்துள்ள இடங்களிலெல்லாம் உடனடி covid-19 பரிசோதனை எடுக்கப்படும் என்று  அரசாங்கம் அறிவித்துள்ளது.

மாகாணத்திலேயே மிகப்பெரிய சில்லரை வியாபார மருந்தகம் தற்பொழுது மாகாணத்தின் பல பகுதிகளில் உடனடி covid-19 பரிசோதனை செய்துகொள்ளும் வசதிகளை வழங்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் shoppers drug mart ஆனது இந்த வசதியை covid-19 அறிகுறியை கண்டறியாதவர்கள் மற்றும் covid-19 பரிசோதனை முடிவில் நேர்மறையான முடிவைப் பெற்றிருப்பவர்கள் உடன் நேரடியாக தொடர்பு கொள்ள இயலாதவர்கள் இந்த உடனடி covid-19 பரிசோதனை உபகரணத்தை 40 டாலர்களுக்கு பெற்றுக் கொள்வதற்கு வழி வகை செய்கிறது.

Covid-19 வைரஸ் தொற்றினை கண்டறிய பயன்படும் PCR போன்ற சாதாரண பரிசோதனையில், பரிசோதனையின் முடிவு 48 மணி நேரங்களுக்கு பின்னரே அறிந்து கொள்ள இயலும்.

ஆனால் இந்த உடனடி COVID-19 பரிசோதனையின் மூலம் பதினைந்திலிருந்து இருபது நிமிடங்களுக்குள் பரிசோதனையின் முடிவினை தெரிந்துகொள்ள முடியும் என்று அறிவித்துள்ளது.

சாதாரண PCR பரிசோதனையை விட இந்த உடனடி Covid-19 பரிசோதனையானது மிகவும் உணர் திறன் மிக்கது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் பரிசோதனை முகாம் ஆனது அல்பேட்டா பகுதியில் தொடர்ந்து இயக்கத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பரிசோதனை அதிகப்படுத்துவதன் மூலம் தடுப்பூசி மருந்துகள் விரைவில் செலுத்தி covid-19 வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளது.