பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் -ஒன்டாரியோ மாகாண அரசாங்கம் அறிவிப்பு

Alberta
School
பாடசாலைகள் திறப்பதற்கான திட்டங்கள் :

ஒன்டாரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்று கணிசமாக குறைந்து வருவதை தொடர்ந்து கட்டுப்பாட்டு தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. இலையுதிர் காலங்களில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்ட உடன் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வெவ்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிவிக்கப்படும் என்று ஒன்டாரியோ மாகாணத்தின் தலைமை பொது சுகாதார அதிகாரி கூறினார்.

மீண்டும் பாடசாலைகள் திறப்பதற்கான திட்டத்தை டக் போர்ட் அரசாங்கம் தயார் செய்து வருகிறது. சில வாரங்களுக்குள் பாடசாலைகள் திறக்கும் திட்டத்தை பொதுமக்களுக்கு மாகாண அரசாங்கம் வெளியிடும்.

கடந்த செவ்வாய்க்கிழமை சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் கீரன் மூர் “covid-19 பரிசோதனைகள் செய்யப்படாத மற்றும் covid-19 தடுப்பு ஊசி செலுத்தப்படாத மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தனித்தனியான விதிமுறைகள் இருக்கும்” என்று செய்தியாளர்களிடம் கூறினார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு covid-19 தடுப்பூசியை கட்டாயமாக்கும் திட்டங்கள் மாகாண அரசாங்கத்திற்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் covid-19 நேர்மறையான முடிவு வந்த சூழலில் கடந்த வருடம் வகுப்புகள் முழுமையாக வீட்டிலிருந்தபடியே மெய்நிகர் வாயிலாக நடைபெற்றது. இந்த ஆண்டு அவ்வாறு இல்லாமல் முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு பாடசாலைக்கு திரும்பும் வாய்ப்பு அளிக்கப்படும்.

மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் இரண்டு கட்ட தடுப்பூசிகளை பெறுவதால் நோய் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதுடன் மட்டுமின்றி பள்ளிக்கு வந்து விளையாட்டுகள் போட்டிகள் போன்றவற்றில் பங்கேற்று பள்ளி அமைப்புகளின் சுற்றுச் சூழலோடு இணைந்து இருப்பது சிறந்தது என்று அறிவித்தார்.