மீண்டும் பள்ளிகள் மூடப்படுகிறது – மாணவர்களுக்கிடையே covid-19 வைரஸ் தொற்று

Ottawa
Canada schools debate how to act on common cold symptoms

Covid-19 வழக்குகள் பள்ளி மாணவர்களுக்கிடையே பதிவானதை தொடர்ந்து பள்ளிகளை மூடுவதற்கு பள்ளி வாரியம் முடிவு எடுத்துள்ளது. Covid-19 வைரஸ் தொற்று மாணவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் Courtise தொடக்கப்பள்ளி இன்று மூடப்பட்டது.

பணி நீக்கம் செய்யப்பட்ட பாடசாலை ஊழியர்கள் ,covid-19 வைரஸ் தொற்றின் தீவிரம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை போன்றவற்றின் காரணத்தால் பீட்டர்பரோ விக்டோரியா நார்த்தம்பர்லாண்ட் மற்றும் கத்தோலிக்க மாவட்ட பள்ளி வாரியம் Durham Region Health Department (DRDH) உடன் இணைந்து பள்ளிகளை மூடுவதற்கு தீர்மானம் செய்துள்ளது.

பாடசாலைகளில் தனிப்பட்ட முறையில் கற்பதற்கு தடை செய்து பள்ளிகளை உடனடியாக மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் பள்ளிகளில் covid-19 வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் என்று கூறப்படுகிறது.

குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் அனைவரும் தொலைதூர கற்றலுக்கு மாறுவார்கள் என்று கூறப்படுகிறது.

Covid-19 வைரஸ் தொற்று அறிகுறி வெளிப்பட்டதிலிருந்து பத்து நாட்களுக்கு தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று DRHD அறிக்கையில் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 19 முதல் ,செப்டம்பர் 24 வரை பாடசாலைகளில் படித்த பிற மாணவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறியுள்ளனர்.

பாடசாலைகளில் பங்கேற்கும் கடைசி நாளில் இருந்து பத்து நாட்களுக்கு Covid-19 அறிகுறிகளை தானே கண்காணித்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ,ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் Covid-19 பரிசோதனைக்கு கட்டாயமாக உட்படுத்தப்பட வேண்டும் என்று பள்ளி வாரியம் பரிந்துரைத்துள்ளது.