கனடாவில் பனிப்பொழிவின் உக்கிரம்! பள்ளி பேருந்து சேவையில் உண்டான சிக்கல்!

school bus
Rows of school buses are parked at their terminal, Friday, July 10, 2020, in Zelienople, Pa. (AP Photo/Keith Srakocic)

கனடாவின் ஒன்டாரியோ பகுதியில் பள்ளிப் பேருந்துகள் சேவை கடுமையான பனிப்பொழிவின் காரணமாக சேவையை நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒன்டாரியோ பகுதியிலுள்ள ஒரு சில முக்கிய பாடசாலைகளுக்கு இந்த அறிவித்தல் கிடையாது என்றும், மேலும் பனிப்பொழிவு காரணமாக மிகவும் தூரமாக உள்ள பாடசாலைகளுக்கு இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டப்ரின் பீல் கத்தோலிக்க போர்டு பாடசாலைக்கு அனைத்து பேருந்து சேவைகளும் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யோக் பகுதி பாடசாலைகள் அனைத்தும் திறப்பதற்கும், மேலும் அனைத்து பேருந்து சேவைகளும் இயங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பில் பகுதி  பாடசாலையிலும் பேருந்துகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  சிம்கோ கௌன்டியில் வடதிசையில் உள்ள அனைத்து பேருந்துகளும் தடை செய்யப்பட்டது.

Guelp and wellington பகுதியில் உள்ள வடக்கு மற்றும் மத்திய வெல்லிங்டன் பகுதியில் குல்ப் பகுதியிலும் பேருந்து சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

வாட்டர்லூ பகுதியில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. மேலும் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது.

இவ்வாறு கனடா மாகாணங்களின் சில பகுதிகளில் பேருந்து சேவை மற்றும் பள்ளிகள் திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

Dufferin-Peel Catholic District School Board: All bus service in Dufferin County including to Robert F. Hall Secondary School are cancelled.

York Region District School Board: All schools open and buses are running.

Peel District School Board: All schools open and buses are running

Simcoe County: All buses in north weather zone have been cancelled.

Guelph and Wellington: Buses have been cancelled in North Wellington, Centre Wellington, as well as Guelph.

Waterloo Region: All schools are closed and buses are cancelled for the Waterloo Region District School Board and Waterloo Catholic District School Board.