கனடாவிற்கு கடத்தப்பட்ட இந்திய சிலை – நூறு வருடங்களுக்குப் பின்னர் இந்தியாவிற்கு திரும்பியதால் பிரதமர் மோடி பாராட்டு

india annapurna statue from canada sasketchewan museum ganges

1913 ஆம் ஆண்டில் அன்னபூரணா கடவுள் சிலையை இந்தியாவின் இந்து கோயிலிலிருந்து ரெஜினா லாயர் நார்மன் மெக்கன்சி என்பவர் கடத்திச் சென்றார். கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கும் மேலாக இந்த சிலையானது ரெஜினாவின் கலைக்கூடத்தின் அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்தது.

திருடப்பட்ட சிலையானது கடந்த மாதம் இந்தியாவிற்கு திரும்பியதைத் தொடர்ந்து ,சஸ்கச்சுவான் கலைக்கூடத்தில் உள்ள 2000 துண்டு சிலைகளை ஆராய்ச்சி செய்து வருகிறது. திருடப்பட்ட இந்திய சிலையைப் பற்றி விசாரணை செய்தபோது மெக்கன்சி சீனா மற்றும் சிரியா போன்ற பிற நாடுகளிலிருந்து வாங்கிய பிற சிலை துண்டுகள் பற்றிய கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற நாடுகளிலுள்ள அருங்காட்சியகங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளை திருப்பித் தருவதற்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இந்தியாவின் புனித நகரமான வாரணாசிக்கு வந்த மெக்கன்சி கங்கை நதிக்கு அருகில் உள்ள இந்து கோவிலுக்கு சென்றுள்ளார். அச்சமயம் குளத்தின் ஓரத்தில் மூன்று சிலைகள் இருப்பதை கண்டார். பின்னர் இரவு நேரத்தில் மூன்று சிலைகளில் ஒன்றான அன்னபூர்ணா தேவி சிலையை கொள்ளையடித்த மெக்கன்சி கனடாவின் சஸ்கெச்சுவானுக்கு கடத்தி சென்றார்.

அன்னபூரணி சிலை கடந்த மாதம் இந்தியாவின் வாரணாசிக்கு வண்ணமயமான ஆடைகள் மற்றும் மலர்களால் மூடப்பட்டு நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யப்பட்டபோது ஊர்வலத்தை காண இந்து மத நம்பிக்கையாளர்கள் தெருக்களில் வரிசையாக நின்று மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.அன்னபூரணி சிலை இந்தியாவிற்கு மீண்டும் திரும்புவதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார் என்று கூறப்படுகிறது.