மான்கள் இடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் – வேட்டையாடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க கனேடிய விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்

deer sars cov 2

உலகம் முழுவதிலும் மனிதர்களிடையே தீவிரமாக பரவி வரும் Covid-19 வைரஸ் தொற்று உலகளாவிய இறப்பு சதவீதத்தை அதிகரித்துள்ளது.மனிதர்களுக்கிடையே பரவும் Covid-19 வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம் அணிதல், சானிடைசர் உபயோகப்படுத்துதல் போன்ற செயல்முறைகளை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

உலகிலேயே முதன்முதலாக கனடிய விஞ்ஞானிகள் விலங்குகளிலிருந்து SARS CoV-2 பரவுவதை ஆராய்ந்து நடத்திய பகுப்பாய்வை தொடர்ந்து ,மான்களிலிருந்து மனிதர்களுக்கு covid-19 வைரஸ் தொற்று பரவ முடியும் என்று தொடக்க கட்ட ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.

இதுவரை மனிதர்கள் Covid-19 வைரஸ் தொற்றை மான்களுக்கு பரப்பியதற்கான ஆதாரங்கள் மட்டுமே ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.ஒரு மானிலிருந்து மற்ற மான்களுக்கு வைரஸ் தொற்று பரவுகிறது.

Covid-19 வைரஸ் மாறுபாடுகளின் ஆதாரமாக விலங்குகள் மாற முடியுமா மற்றும் SARS-CoV-2-க்கு நீர்த்தேக்கமாக செயல்பட முடியுமா என்பதை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருவதால் ,வைரஸ் தொற்று மான்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடும் என்பதற்கான புதிய சான்றுகள் கிடைத்துள்ளன.

கடந்த 2021-ஆம் ஆண்டு தெற்கு ஒன்டாரியோவில் இலையுதிர் காலத்தின் போது நூற்றுக்கணக்கான மான்கள் வேட்டையாடுபவர்களால் கொல்லப்பட்டது.கொல்லப்பட்ட மான்களிடமிருந்து விஞ்ஞானிகளால் மாதிரிகள் எடுக்கப்பட்டது. மான்களின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்த விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

மனிதனிடமிருந்து பிற மனிதர்களுக்கு வைரஸ் தொற்று பரவும் அபாயத்தை விட மான்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றிக் கொள்ளும் அபாயம் அதிகமாக இருப்பதால் வேட்டையாடுபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்