ரஷ்யா கடமைகளை மீறுகிறது – ரஷ்யாவுக்கு எதிராக ஒருங்கிணையும் கனடாவின் நட்பு நாடுகள்

justintrudeau

கடந்த சில நாட்களாக உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்யா தனது இராணுவ படைகளை குவித்து அச்சுறுத்திய நிலையில் தற்பொழுது உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு தொடக்கத்திலிருந்தே மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொருளாதார தடையை அறிவித்திருந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரேனில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ராணுவ படைகளை திரும்பப் பெறவேண்டும் என்று ரஷ்ய அதிபர் Vladimir Putin-ஐ கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேட்டுக்கொண்டுள்ளார்.

புதன்கிழமை பிற்பகுதியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ” ரஷ்யாவின் படையெடுப்பினை கனடா வன்மையாக கண்டிக்கிறது” என்று கூறினார்.உக்ரேனிய மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க சுதந்திரமாக இருக்க வேண்டும் மேலும் உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ரஷ்யாவின் இந்த தாக்குதலை “கடுமையான போர் குற்றம் ” என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடாவின் தூதர் பாப் ரே கூறினார் .உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு ரஷ்ய பிரதமர் புடின் தான் காரணம் அவரை வெற்றிபெற ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ரே கூறினார்

ரஷ்யாவின் அத்துமீறல்கள் உக்ரைனின் இறையாண்மையை இழிவுபடுத்துகிறது. ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் ரஷ்யா கடமைகளை மீறுகிறது. ரஷ்யாவிற்கு ஏற்கனவே பொருளாதார தடையை அறிவித்த கனடா ரஷியாவின் போர் நடவடிக்கைகளால் மேலும் பல விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்