ரஷ்யா -உக்ரைன் மோதலில் NATO தலையிடவேண்டும் என்று கனடியர்கள் நம்பிக்கை – கருத்துக் கணிப்பில் முதல் முறை

ukraine nato canada

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் NATO இராணுவத் தலையீட்டிற்கு தயாராக வேண்டும் என்று பெரும்பான்மையான கனடியர்கள் நம்புவதாக ஒரு புதிய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

Leger அமைப்பினால் ஆன்லைனில் நடத்தப்பட்ட. கருத்துக் கணிப்பில் இவ்வாறு தெரியவந்துள்ளது. 1000 அமெரிக்கர்கள் மற்றும் 1515-க்கும் மேற்பட்ட கனடியர்களிடம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக Leger தெரிவித்தது.

வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை உக்ரைனுடன் தனது ஆதரவை ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள், உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை அனுப்புதல் போன்றவற்றின் மூலம் உறுதியான ஆதரவை சமிக்ஞை செய்துள்ளது. ஆனால் படையெடுப்பிற்கு துருப்புகளை அனுப்பவில்லை.

Leger நிர்வாகத் துணைத் தலைவர் கிரிஸ்டியன் போர்க் ” இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ராஜதந்திரம் மற்றும் தடைகளுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்” என்று மக்கள் கூறுவது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார். கிட்டத்தட்ட 49% கனடியர்கள் படையெடுப்பிற்கு ராஜதந்திர முடிவு சாத்தியம் என்று கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

64 சதவீதத்தினர் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல் நீண்ட நாட்களுக்கு தொடரும் என்று நம்புவதாக கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர் ரஷ்யாவிற்கு எதிராக மேலும் பல பொருளாதார தடைகளை அறிவிக்க வேண்டும் என்று 65% கனடியர்கள் தெரிவித்துள்ளனர்