ரஷ்யா மீது ஆவேசமடைந்த கனடா – உக்ரைன் மீதான கடுமையான தாக்குதலுக்கு எதிராக ஜி7 நாடுகள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக G7 நாடுகள் ஒருங்கிணைந்து உள்ளன. கனடா உட்பட G7 நட்பு நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதாரத் தடையை அறிவித்தன. கடந்த வியாழக்கிழமை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ரஷ்ய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடையை அறிவித்தார்.

ரஷ்ய முக்கிய வங்கிகள் உட்பட 62 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்திற்கும் கனடா பொருளாதாரத் தடையை அறிவிக்கும் என்று பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளார்.

ரஷ்ய உயர் அடுக்கின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ,ரஷ்யாவின் துணை ராணுவ அமைப்பான வாக்னர் குழு போன்றவற்றிக்கும் கனடா தடை அறிவிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

உக்ரைன் மீதான ரஷ்யாவின் கடுமையான தாக்குதலுக்கு பதிலடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி நடவடிக்கை எடுத்துள்ளார். சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள சரக்குகளை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான அனுமதிகளை ரத்து செய்யப்படும் என்று மெலனி அறிவித்தார்

ரஷ்யாவிற்கான பொருளாதாரத் தடைகள் பரந்த அளவில் இருப்பதால் ரஷ்யாவின் அத்துமீறல்களை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருக்கும் ரஷ்ய உயர் அடுக்கின் மீது செலவுகளை சுமத்துவார்கள். நியாயமற்ற படையெடுப்பிற்கு ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் தொடர்ந்து நிதி அளித்து வருவதை கட்டுப்படுத்துவார்கள் என்று பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.