மூடப்பட்ட டொராண்டோ சாலைகள்! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

john-tory
Toronto residents who are desperately hoping

ரொறன்ரோவில் பெரும்பான்மையான சாலைகள் covid-19 தொற்றினால் மூடப்பட்டுள்ளன. தற்பொழுது இந்த வார இறுதிக்குள் மூடப்பட்டிருந்த சாலைகள் உடற்பயிற்சி போன்ற உபயோகங்களுக்கு திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சாலைகள் திறக்கப்படும் எனினும் மக்கள் குறிப்பிட்ட இடைவெளி கடைப்பிடித்து உபயோகிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பே வியூ அவென்யூ மற்றும் லேக் ஷோர் போலிவாட் ஈஸ்ட் ஆகிய பகுதிகளில் மே மாதம் ஒன்றாம் தேதி ஆறு மணியிலிருந்து மே மாதம் இரண்டாம் தேதி இரவு 9 மணி வரை பின்பற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் மூடப்பட இருக்கின்ற இந்த சாலைகள் வாகனங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் போன்றவற்றிற்கு திறக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டிகளுக்கு சாலையில் அனுமதிக்கப்பட்டாலும் ஒவ்வொருவரும் இரண்டு மீட்டர் அளவு இடைவெளி கடை பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து மேயர் ஜான் டோரி அவர்கள் கருத்தினை தெரிவித்துள்ளார். மக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில் சரியான இடைவெளியில் கடைபிடித்து தனிமனித சுகாதாரத்தை பேணி பாதுகாக்கின்ற மக்கள் அனைவரையும் தான் ஊக்குவிப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டொரன்டோ பகுதியில் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட சாலைகளில் சரியான இடைவெளி கடைபிடித்து வெளிப்புறச் சூழலை அனுபவித்த மக்கள் அனைவரும் சுகாதாரமாக இருக்கின்றனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் விதிக்கு உட்பட்டு விதியை பின்பற்றினாலே தொற்று பரவுதல்லிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்