வருகின்ற பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் ஒன்ராறியோ முழுக்க அமலுக்கு வரும் உத்தரவு!

COVID-19
Canada surpasses 15,000 deaths related to COVID-19

ஒன்டாரியோ பகுதியில் 27 பிராந்தியங்களை வருகின்ற பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் வீட்டில் தங்கும் உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப் போவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் கீழ் செவ்வாய் முதல் பிராந்தியங்கள் அனைத்தும் மீள திறக்கப்படும் கட்டமைப்புக்குள் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பிராந்தியங்களில் அத்தியாவசியமற்ற வணிகங்களை மீள திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

டோரன்டோ, பீல், யோர்க் ஆகிய பகுதிகள் மீளத் திறக்கும் கட்டமைப்பிற்குள் இல்லை என்று அறிவித்துள்ளனர்.

இந்தப் பகுதிகளில் குறைந்தது பிப்ரவரி 22 ஆம் தேதி வரை வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கனடிய அரசாங்கம் மேலும் 4 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை கொள்வனவு செய்துள்ளது. இதனை ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் அறிவித்துள்ளார்.

ஏப்ரலில் இருந்து ஜூன் வரையிலான கால இடைவெளியில் பைசர் தடுப்பூசி மருந்துகளை 4 மில்லியன் மருந்துகள் பெறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய அரசாங்கம் அடுத்த மாதம் ஆட்சி இறுதிக்குள் 4 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை பைசர் நிறுவனத்திடமிருந்து பெற்று விடும் என்று உறுதி பாட்டினை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி மருந்துகள் கனடாவின் அனைத்து மாகாணங்களுக்கும் மிக விரைவில் விநியோகிக்கப்படும் என்றும் அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்க: அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர்! கனடாவுக்குள் வரும் சர்வதேச பயணிகளுக்கு விதிக்கப்படும் கடும் கட்டுப்பாடு!