வீட்டுச் சுவர்களில் கெட்ட வார்த்தைகள், இனவெறியைக் குறிக்கும் ஓவியங்கள் -கனடாவில் இந்திய வம்சாவளியினர் மீது இனவெறி தாக்குதல்!

canada racist
canada racist attack

கனடாவின் வான்கூவர் நகரின் சம்மர்லேண்ட் பகுதியில் உள்ள ஒரு இந்திய வம்சாவளியினரின் வீட்டை நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் குறிவைத்து தாக்கியுள்ளனர்.

தாக்குதல் நடந்த நேரத்தில் ரமேஷ் லேகி மற்றும் கிரண் லேகி தம்பதியர் மட்டுமே, வீட்டில் இருந்துள்ளனர்.

இரவு நேரம் என்பதால், மேலும் ஏதாவது நடந்துவிடுமோ என்ற பயத்தில் அவர்கள் வெளியே வரவில்லை. காலையில் எழுந்து பார்த்த பொழுது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருந்தன.

மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக வீட்டுச் சுவர்களில் கெட்ட வார்த்தைகள் எழுதப்பட்டிருந்ததோடு, இனவெறியைக் குறிக்கும் ஓவியங்கள் மற்றும் ஆபாச படங்கள் வரையப்பட்டிருந்தன.

இந்த சம்பவத்தை அறிந்தவுடன் தம்பதியரின் மூன்று குழந்தைகளும், அதிகாலையிலேயே பெற்றோர் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து விட்டார்கள்.

இது இனவெறி தாக்குதல் என்பதை உறுதி செய்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும் இந்தப் பகுதியில் இனி வசிப்பதற்கே அச்சமாக இருக்கிறது என கூறியுள்ளனர்.

வயதானவர்கள் இருக்கும் வீட்டில், இப்படி ஒரு அத்துமீறல் நிகழ்ந்திருக்கிறது என்றால், தாக்குதல் நடத்தியவர்கள் மிக மோசமானவர்களாக இருக்க வேண்டும் என்று தம்பதியின் மகள் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை அறிந்த சம்மர்லேண்ட் நகர மேயர் டோனி பூட், இது ஒரு குடும்பத்தின் மீதான தனிப்பட்ட தாக்குதல் என்று கூறிவிட முடியாது. இன ரீதியாக வேண்டுமென்றே குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என விமர்சித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த ஆறுதல் கூறிய மேயர், அவர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms