செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்! கனடாவில் தெற்காசிய நாட்டவர்களை குறிவைத்து தாக்குதல்!

south asians
racism south asians canada

சமீப காலமாக அமெரிக்காவில் தான் இனவெறித்தாக்குதல் உச்சத்தில் உள்ளது என்று பார்த்தால், கனடாவில் கடந்த இரு வாரங்களாக தெற்காசிய ( south asians )நாட்டவர்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது.

இந்த குறுகிய கால இடைவெளிக்குள் மட்டும் நான்கு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து, தகவல் தெரிந்த பொதுமக்கள் காவல் துறையினரை அணுகவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி லேக்ஷோர் பவுல்வர்டு மேற்கு மற்றும் லெஜியன் சாலையில் தெற்காசிய நாட்டவர் மீது தாக்குதல் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தின் போது, தாக்குதலில் ஈடுபட்டநபர் ஒரு பொருளை கையில் வைத்துக் கொண்டு, 32 வயதான ஒருவரை நோக்கி இனரீதியாக இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் காவல்துறையினரை அழைக்க முயன்றதாகவும், ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட நபர் அந்த தொலைபேசியை எடுத்து தரையில் வீசியதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதற்கு மேல், சம்பவ இடத்தில் நிற்க விருப்பம் இல்லாமல், கீழே வீசப்பட்ட மொபைலை எடுத்துகொண்டு, அந்த 32 வயது தெற்காசிய நாட்டவர் அங்கிருந்து தப்பியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கு ஒரு நாள் முன்னதாக லேக் ஷோர் பவுல்வர்டு மேற்கு மற்றும் 29 தெரு பகுதியில், இளம்  பெண்ணுடன் நடந்து சென்று கொண்டிருந்த 27 வயது இளைஞரை ஒரு நபர் இனவெறியுடன் தாக்கும் நோக்கில் அணுகியதாக தகவல் வெளியானது.

தொடர்ந்து அந்த இளைஞர் சரமாரியாக தாக்கப்பட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், ஆகஸ்ட் 31 மற்றும் ஆகஸ்ட் 25 ஆகிய இரண்டு தேதிகளில் இதேபோன்ற இரண்டு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதில் ஒரு சம்பவத்தில்  21 வயது இளைஞரை அவரது தலைப்பாகையை அகற்ற சொல்லி தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் தீவிரமாக விசாரித்து வருவதாக காவல்துறை  தரப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்க: நகர மேயர்களின் ஒருமித்த முடிவு! அடுத்த ஆண்டு வரையில் கனடா எல்லையில் கால் பதிக்க முடியாது!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Related posts

Toronto Bakery : டொராண்டோ பேக்கரிக்குள் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு! இரத்த வெள்ளத்தில் சரிந்த மக்கள்!

Editor

Summer : 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்ட கனடா நகரம்!

Editor

கனடாவில் மதுபானசாலைகள் மற்றும் இரவு விடுதிகளில் நள்ளிரவுக்குப் பிறகு அமலுக்கு வரும் நடவடிக்கை!

Editor