பழங்குடியின பெண்ணுக்கு கனடா மருத்துவமனையில் நேர்ந்த துயரம்!

Joyce Echaquan
Joyce Echaquan, a mother of seven, died on Monday at the Joliette hospital. In her last moments, livestreamed on Facebook, hospital staff are heard degrading her and swearing at her. Global's Gloria Henriquez reports.

கனடாவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற பழங்குடியின பெண் (Joyce Echaquan) மீது இன ரீதியாக துன்புறுத்தல் அரங்கேற்றிய விவகாரத்தில் இரண்டாவது நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் செப்டம்பர் 28 ஆம் தேதி கியூபெக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அரங்கேறியுள்ளது.

37 வயதான ஜாய்ஸ் எகுவான் என்ற பெண், கடந்த வார இறுதியில் வயிற்று வலி இருப்பதாக கூறி ஜோலியட் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை மோசமாகவும், கீழ்த்தரமாகவும் நடத்தியதாக கூறப்படுகிறது.  மருத்துவமனை ஊழியர்கள், 7  குழந்தைகளுக்கு தாயான அந்த பெண்ணை அவமானப்படுத்தியதுடன், அனைவரையும் ஏமாற்றுவதாக இழிவாக பேசியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, பலரது கவனத்தையும் ஈர்க்கவே, விவகாரம் பெரும் விவாதத்தையும் அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பில் முதலில் ஒரு நர்ஸ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மருத்துவமனை ஊழியர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்கள் இந்தக் காலத்திலும் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நாடாமல் இருப்பதன் முதன்மையான காரணமாக இச்சம்பவம் பார்க்கப்படுகிறது.

அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் இனவாத தாக்குதல் காரணமாக ஒரு வித பய உணர்வு இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், ஜாய்ஸ் எகுவான் என்ற அந்த பழங்குடியின பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளார்.’

அவர் தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றும் வெளியாகவே, பொதுமக்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்க: கனடாவில் மீண்டும் நீட்டிக்கப்பட்ட பயணத்தடை! கனடா வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிரடி முடிவு!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.