நீட்டிக்கப்படுமா நிறவெறி ? – கறுப்பின மாணவர்கள் எதிர்கொள்ளும் தடைகள்

south asians
racism south asians canada

வேற்றுமையில் ஒற்றுமையை அனைத்து இடங்களிலும் காண்பது அரிது. உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆங்காங்கே இனம், மதம், நிறம் மற்றும் மொழி போன்றவைகளுக்காக மக்களிடையே அமைதியின்மை நிலவிவருகிறது .கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் நிற வெறியினால் பல்வேறு வன்முறை தாக்குதல்களும், இனப்படுகொலைகளும் அரங்கேறி வருவது மறுக்க முடியாத உண்மையாகும்.

கனடாவில் கறுப்பர்களுக்கு எதிரான இனவெறியை எதிர்த்துப் போராடுவதற்கான 22 பக்கங்கள் கொண்ட ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கையொப்பம் இடுபவர்கள் சில கொள்கைகளுக்கு உட்பட்டு மதிப்பளிக்க வேண்டும்.

கனடா முழுவதும் உள்ள பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் வியாழக்கிழமை சாசனத்தில் கையொப்பமிடுகின்றன.வாட்டர்லூ பல்கலைக்கழகம், யார்க் பல்கலைக்கழகம் மற்றும் மெக்கில் பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவற்றில் அடங்கும்.

டொரன்டோ பல்கலைக்கழகத்தில் கறுப்பின மாணவர்களுக்கு ஏற்படும் தடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு சிறந்த மனநல ஆதரவு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கனடாவில் பொது நிதி உதவி பெறும் 139 கல்லூரிகளும்,96 பல்கலைக்கழகங்களும் கறுப்பின மக்களுக்கு எதிரான இனவெறியை எதிர்த்து போராடுவதற்கான சாசனத்தில் கையொப்பமிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கறுப்பின மாணவர்களுக்கு உதவித்தொகை, அணுகல் திட்டம் போன்றவற்றின் மூலம் ஆதரவு வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் கறுப்பின அறிவு தோன்றுவதை உறுதி செய்ய பாடத்திட்டங்களை மதிப்பாய்வு செய்து வருகின்றன.

சமூகத்தில் மிகப்பெரிய அளவில் இருக்கும் இரண்டாம் நிலை கல்வி நிறுவனங்களில் கறுப்பின மாணவர்கள் பல்வேறு தடைகளை எதிர்கொள்கின்றனர். பாடசாலைகளில் கறுப்பின மாணவர்கள் தனியாக இருப்பது போன்று உணர்கிறார்கள் என்று பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனன்யா முகர்ஜி கூறியுள்ளார்.