வௌவால்கள் மூலம் மனிதர்களுக்கு ரேபிஸ் வைரஸ் தொற்று – டொரன்டோ பொதுசுகாதாரம் எச்சரிக்கை

toronto high park rabies bat
toronto high park bat rabies virus

டொரண்டோவின் உயர் பூங்காவில் உள்ள வௌவ்வால் ஒன்றை சோதனை செய்ததில் வெறி நாய் கடியினால் ஏற்படும் ரேபிஸ் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரேபீஸ் வைரஸ் உமிழ்நீர், ரத்தம் போன்றவற்றினால் பரவும் அபாயம் இருப்பதால் டொரன்டோ சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஜூலை 19 ஆம் தேதி அன்று டொரன்டோ நகரின் ஹை பார்க்கில் உள்ள வௌவ்வால் ரேபிஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வக முடிவுகள் உறுதிப்படுத்துவதாக டொரன்டோ சுகாதார அமைப்பு (TPH) வெள்ளிக்கிழமை செய்தி மாநாட்டில் அறிவித்தது.

ஜூலை 19 அன்று பூங்காவில் இருந்த வௌவாலை கையாண்ட. அல்லது தொடுதல் மூலம் தொடர்பு கொண்டவர்கள் ரேபிஸ் நோய் அபாயத்தை கண்டறிவதற்கு டொரன்டோ பொது சுகாதார அமைப்பினை (TPH) தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ரேபிஸ் நோய் தொற்று வெறிநாய் கடித்தல் மற்றும் கீறல் போன்றவற்றின் மூலம் பரவுகிறது. ரேபிஸ் தொற்று பாதிக்கப்பட்ட உயிரினத்தின் உமிழ் நீர் மூலம் எளிதாக பரவும் தன்மை உடையது.

ரேபிஸ் வைரஸ், சூடான ரத்தம் கொண்ட மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது. ரேபிஸ் ஒரு வைரஸ் தொற்று என்பதால் தீவிரம் அடைவதற்கு முன்பு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

ஒன்ராரியோ மாகாணத்தில் 2 முதல் 3 சதவீதம் வரையிலான வௌவால்கள் மட்டுமே ரேபிஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் வௌவால்களால் மனிதர்களுக்கு ரேபிஸ் தொற்று பரவும் அபாயம் மிகக்குறைவு என்று டொரன்டோ பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது