முதல் முறையாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் கனடா மாகாணம் எது தெரியுமா? முடிவான தீர்மானம்!

lockdown
corona case canada

கனடாவில் முதல் முறையாக, நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த, கியூபெக் மாகாண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வருகின்ற திங்கட்கிழமை முதல், சமூக இடைவெளி வழிகாட்டுதல்களை கியூபெக் அரசாங்கம் தளர்த்தவுள்ளது. மேலும், 50 பேர் வரை கூடும், உட்புறக் கூட்டங்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், சமூக இடைவெளி இரண்டு மீட்டர் தூரத்திலிருந்து 1.5 மீட்டர் தூரமாக தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளில் 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் ஒரு வகுப்பறையில், ஒரு மீட்டர் தூர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms