நெருக்கடியில் உள்ள கியூபெக் மாகாணம் – மக்களுக்கு அறிவுரை கூறிய முதல்வர் லெகால்ட்

Quebec
montreal quebec city highest alert level

கியூபெக் மாகாண முதல்வர் வெள்ளிக்கிழமை அன்று covid-19 வைரஸ் தொற்று மற்றும் ஓமிக்ரோன் மாறுபாடு காரணமாக இனி வரவிருக்கும் கடினமான வாரங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்தார்.covid-19 வைரஸ் விரைவாக பரவி வருகின்ற நிலையில் கியூபெக் மக்கள் விடுமுறை காலங்களை முன்னிட்டு கூட்டம் சேர்வதால் நோய் தொற்று குறித்து விழிப்புணர்வுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

தொற்றுநோய் பரவ தொடங்கியதிலிருந்து சந்தித்த சிரமங்களை விட ஓமிக்ரோன் மாறுபாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தொற்றுநோயாக உள்ளது என்று முகநூலில் வெளியிடப்பட்ட கிறிஸ்துமஸ் செய்தியில் பதிவிட்டார்.மேலும் பொதுமக்கள் அரசாங்கத்தின் அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை மதித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

வீரியமிக்க ஓமிக்ரோன் மாறுபாடு பரவல் காலத்தில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் துணிச்சலாக அர்ப்பணித்து பணியைத் தொடர்ந்து செய்து வருவதால் பாராட்டு தெரிவித்தார்.

கனடாவின் வேறு எந்த மாகாணத்திலும் இல்லாது கியூபெக் மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் தினசரி அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மாகாண அரசாங்கம் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. 50 சதவீத திறன் உடன் உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் தடுப்பூசி மருந்துகளை போட்டுக் கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் தனிமனித சுகாதாரத்தை பாதுகாத்து வைரஸ் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.