கியூபெக் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் பிரான்கோயிஸ்

legault qubec

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் covid-19 வழக்குகள் தினசரி அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. Covid-19 பரவலை கட்டுப்படுத்தாவிட்டால் மாகாணம் முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழியும் என்று கியூபெக் மாகாணத்தின் முதல்வர் பிரான்கோயிஸ் லெகால்ட் பொது மக்களை எச்சரித்தார்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதித்து இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்ததோடு மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். மக்களை அச்சுறுத்தி வரும் கவலைக்குரிய மாறுபாடான ஓமிக்ரோன் பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஊரடங்கு விதியானது இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கு ஆனது காலவரையற்ற நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று மான்ட்ரியலில் செய்தியாளர்களிடம் முதல்வர் பிரான்கோயிஸ் கூறினார்.

வியாழக்கிழமை ஒரு நாளில் மட்டும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட covid-19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் வெள்ளிக்கிழமை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் முதல்வர் பிரான்கோயிஸ் கூறினார்.

மாகாணத்தில் தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால் அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை அதிகரித்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது என்று தெரிவித்த முதல்வர் covid-19 பரவல் அரசாங்கத்தின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்பு அரசாங்கம் முதன்முதலில் நீக்கும் உத்தரவாக ஊரடங்கு உத்தரவு இருக்கும் என்று தெரிவித்தார்.