கியூபெக் மாகாணத்திற்கு வேறு வழி இல்லை – வேகமாக பரவி வரும் ஓமிக்ரோன் மாறுபாடு

கனடாவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான கியூபெக்கில் covid-19 வழக்குகள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மாகாண அரசாங்கம் சிரமத்திற்கு உள்ளாகியது. மாகாணத்தின் அத்தியாவசிய ஊழியர்கள் பலர் covid-19 பரிசோதனையில் நேர்மறையான முடிவுகளை பெற்ற பின்னரும் ,ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து பணியாற்ற அனுமதிப்பதை தவிர மாகாணத்திற்கு வேறு வழியில்லை .

உலகையே அச்சுறுத்தி வரும் ஓமிக்ரோன் மாறுபாடு வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி வழக்குகளின் எண்ணிக்கை கியூபெக் மாகாணத்தில் அதிகரித்து வருகிறது. திங்கள் கிழமை மட்டும் கியூபெக் மாகாணத்தில் ஏறத்தாழ 13000 Covid 19 வழக்குகள் பதிவாகியுள்ளன.

Covid-19 பரிசோதனையில் நேர்மறையான முடிவுகளை பெற்ற அத்தியாவசிய ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ் இடர் மேலாண்மை மற்றும் முன்னுரிமை பட்டியலின்படி தொடர்ந்து பணியாற்ற முடியும் என்று சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டூப் கூறினார். இது குறித்த தகவல்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை கியூபெக் மாகாணம் மக்களுக்கு வழங்கும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார். Covid-19 வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த வாரம் ,உடற்பயிற்சிக் கூடங்கள் ,பார்கள் மற்றும் கேசினோக்களை மூட மாகாண அரசாங்கம் உத்தரவிட்டது .

உணவகங்கள் மற்றும் தனியார் வீடுகளில் கூடும் கூட்டத்தின் அளவை கட்டுப்படுத்த ஆறு பேருக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. மேலும் வீட்டிலிருந்தபடியே பணிகளைச் செய்வதற்கு மக்களை வழிநடத்தியது.